சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 1
பாடல்
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
பொருள்
போக்கும் = போவதும்
வரவும் = வருவதும்
புணர்வும் = இணைவதும்
இலாப் = இல்லாத
புண்ணியனே = புண்ணியனே
காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே
காண்பரிய = காண்பதற்கு அரிதான
பேரொளியே = பெரிய ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே
அத்தா = அத்தனே
மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்
சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
வரவும் = வருவதும்
புணர்வும் = இணைவதும்
இலாப் = இல்லாத
புண்ணியனே = புண்ணியனே
காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே
காண்பரிய = காண்பதற்கு அரிதான
பேரொளியே = பெரிய ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே
அத்தா = அத்தனே
மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்
சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?
மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான்.
அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக் கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான்.
இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான்.
இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும்.
போக்கும் இல்லை
வரவும் இல்லை.
புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல்.
இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.
முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது.
இரண்டாவது, எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால் துன்பம்.
மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும்.
நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும்.
கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும்.
அவன் புணர்வும் இல்லாத புண்ணியன்.
போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம்.
மேலும் சிந்திப்போம்
No comments:
Post a Comment