Pages

Tuesday, November 11, 2014

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை 


சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர்.


ஆண்டவன் - பக்தன்;
ஆண்டான் - அடிமை;
நாயகன் - நாயகி என்று பல மன நிலைகளில் ஆண்டவனை அடியவர்கள் வழிபட்டு இருக்கிறார்கள்.

இறைவனை நண்பனாக கொண்டாடியவர் சுந்தரர். இறைவனை வேலை சொல்வது, தனக்காக மனைவியிடம் தூது போகச் சொல்வது என்று மிக மிக உரிமையுடன் ஒரு உயிர் நண்பனைப் போல இறைவனோடு பழகுகிறார்.

அது மட்டும் அல்ல, இடையில் சில கிண்டல் வேறு. 

தெரியாம வந்து இவர் கிட்ட மாட்டிகிட்டோமே என்று நையாண்டி செய்வது போல சுந்தரர் சில பாடல்களைப் பாடி இருக்கிறார்.

பிறப்பதும் இல்லை. மூப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. இருக்கும் இடமோ சுடு காடு. அது மட்டும் அல்ல திரு வேள்விக்குடி மற்றும் திருத் துருத்தி என்ற இடங்களில் வசிக்கிறார். சரி, உடையாவது சரியாக உடுத்துகிராரா என்றால் அதுவும் இல்லை. அவர் இடையில் கட்டுவது பாம்பை. முன்னாலேயே தெரிந்து இருந்தால் இவர்கிட்ட மாட்டி இருக்க மாட்டோம் என்று நையாண்டிப் பொருளில் பாடிய பாடல் இது: 

பாடல்

மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; 
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், 
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் 
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! 

பொருள்

மூப்பதும் இல்லை = வயதாகி மூப்பு அடைவதும் இல்லை

பிறப்பதும் இல்லை = பிறப்பதும் இல்லை

இறப்பது இல்லை = பிறப்பும் இல்லை, மூப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை.

சேர்ப்பு அது காட்டு அகத்து = சேர்ந்து இருக்கும் இடம் சுடு காடு

ஊரினும் ஆக = வாழும் ஊர்

சிந்திக்கின் = யோசித்துப் பார்த்தால்

அல்லால் = மேலும்

காப்பது வேள்விக்குடி , தண்துருத்தி = காவல் செய்து இருப்பது வேள்விக் குடி மற்றும் குளிர்ந்த திருபந்துருத்தி

எம் கோன் = எங்கள் அரசன்

அரைமேல் = இடுப்பின் மேல்

ஆர்ப்பது நாகம் = படம் எடுத்து ஆடுவது நாகப் பாம்பு

அறிந்தோமேல்  = இது தெரிந்து இருந்தால் 

நாம் இவர்க்கு ஆட்படோமே! = நாம் இவருக்கு ஆட் பட்டோமே.



No comments:

Post a Comment