திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை
எவ்வளவு செல்வம் நமக்கு வேண்டும் ?
நாம் எதற்கு செல்வம் சேர்கிறோம்.முதலில் தேவைக்கு சேர்கிறோம். பின் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று சேர்கிறோம்.
எவ்வளவு வேண்டும் எதிர் காலத்திற்கு ? சேர்த்துக் கொண்டே போகிறோம்.
எவ்வளவு பணம் சேர்த்து வைத்தால் நம் எதிர் காலம் கவலை இன்றி கழியும் ?
நம் செல்வத்தை விடுங்கள்....ஒரு அரசனின் செல்வம் ஒன்றும் இல்லாமல் போகும் என்றால் நம் செல்வம் எந்த மூலை ?
சேர்த்த பொருளை அனுபவிக்கிறோமா என்றால் இல்லை. யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம். கொஞ்சம் பிள்ளைகளுக்கு,கொஞ்சம் அரசாங்கத்திற்கு, கொஞ்சம் தான தர்மம் என்று யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.
இதற்கா இந்தப் பாடு ? இதற்கா இத்தனை காலம் செலவழித்தோம் ?
திருமந்திரத்தில், திருமூலர் செல்வத்தின் நிலையாமை பற்றி சொல்லுகிறார்.
அரச பதவியும்,அதிகாரமும், ஆனையும் தேரும் பொருளும், பிறர் கொள்ளப் போவதற்கு முன், உயிரைத் தொடும் செல்வனை (இறைவனை ) அடையாமல் போனால் அது நல்ல தவமாகாது
பாடல்
அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்1
தெருளும் உயிதொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.
பொருள்
அருளும் = அரச ஆணையும்
அரசனும் = அரசனும்
ஆனையுந் தேரும் = யானையும் தேரும்
பொருளும் = செல்வமும்
பிறர்கொள்ளப் போவதன் முன்னந் = பிறர் கொண்டு போவதன் முன்
தெருளும் = அறிவின் தெளிவோடு
உயிதொடுஞ் = உயிரைத் தொடும்
செல்வனைச் சேரின் = செல்வனாகிய இறைவனை சேர்ந்தால்
மருளும் = மயங்கி
பினையவன் = பிணைந்தால்
மாதவ மன்றே.= மாதவமாகாது
No comments:
Post a Comment