இராமாயணம் - முற்றிய சொல்லின் எல்லையான்
முன்பெல்லாம் ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால், யாருக்கு அது நிகழ்கிறதோ அவருக்கு , பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.
திருமணம் என்றால் மாப்பிளைக்கும், பெண்ணுக்கும் அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் திருமணம், வாழ்க்கை, குழந்தை, சமுதாயப் பொறுப்பு என்பவை பற்றி அறிவுரை, அறவுரை கூறுவார்கள். அது அந்த பையனையும், பெண்ணையும் குடும்ப வாழக்கைக்கு தயார் படுத்தும்.
அதே போல, ஒருவன் முடி சூட்டுகிறான் என்றால் அந்த இராசாவுக்கு மந்திரிகள், சான்றோர் எல்லோரும் அறவுரை சொல்வார்கள்.
சுக்ரீவன் முடி சூட்டப் போகிறான். அவனுக்கு இராமன் அறவுரை சொல்கிறான்.
சுக்ரீவன் குரங்குதான். குரங்குக்குச் சொன்ன அறவுரை என்றாலும் அது நமக்கும் பொருந்தும்தானே.
பாடல்
பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நல் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான்.
பொருள்
பொன் = பொன்னால் ஆன
மா = சிறந்த
மௌலி = மகுடம்
புனைந்து = அணிந்து
பொய் இலான் = பொய் இல்லாத (இராமனின்)
தன் மானக் கழல் தாழும் வேலையில் = சிறந்த திருவடிகளில் விழுந்து ஆசி பெறும் வேளையில்
நல் மார்பில் =பரந்த நல்ல மார்பில்
தழுவுற்று = (அவனை) தழுவிக் கொண்டு
நாயகன் = இராமன்
சொன்னான் = சொன்னான்
முற்றிய சொல்லின் எல்லையான் = சிறந்த சொல்களின் எல்லையில் உள்ளவன்.
கடைசி வரி சிந்தக்கக் தக்கது.
ஒரு வார்த்தை சொன்னால் அது சிறந்த வார்த்தையாக இருக்க வேண்டும். அதற்கு மேல் அதை சிறப்பாக சொல்ல முடியாது என்று இருக்க வேண்டும்.
சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.
என்பார் திருவள்ளுவர்.
ஒரு சொல் சொன்னால், அதை விட இன்னொரு சிறந்த சொல் இல்லை என்று இருக்கும்படி சொல்ல வேண்டும்.
இராமன் முற்றிய சொல்லின் எல்லையான். சிறந்த சொற்களின் எல்லை அவன்தான். அவனைத் தாண்டி அந்த சொற்களுக்கு வேறு அர்த்தம் இல்லை.
அவன் சொன்ன அறவுரைகளை பார்ப்போம்.
"இந்த பாட்சா ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி..." என்று நம்ம தலைவர் சொன்னது போல!!
ReplyDelete