தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க
"இத்தனை நாள் வாழ்ந்து நீங்க என்ன கிளிச்சீங்க ? கொஞ்சம் கூட வெக்கம் இல்லை உங்களுக்கு. இப்படியே போனால் கொஞ்ச நாளில் இறந்து போவீர்கள். நீகள் இறந்த பின், இந்த உடல் இருக்கிறதே, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கும் ஒரு பொருளாகப் போய் விடும்"
என்று வெறுத்து கோபித்து சொல்கிறார் திருநாவுகரசர்.
பாடல்
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
பொருள்
நடலை = துன்பமான
வாழ்வு = இந்த வாழ்வை
கொண்டு = வைத்துக் கொண்டு
என் செய்தீர் = என்ன செய்தீர்கள்
நாணிலீர் = நாணம் இல்லாதவர்களே
சுடலை = சுடு காடு
சேர்வது = போய்ச் சேர்வது
சொற் பிரமாணமே = சத்ய வாக்கே
கடலின் = திருபாற்கடலில்
நஞ்சமு துண்டவர் = நஞ்சை அமுதமாக உண்டவர்
கைவிட்டால் = கை விட்டு விட்டால்
உடலி னார் = இந்த உடல்
கிடந்து = கிடந்து
ஊர் = ஊர்
முனி = கோபிக்கும்
பண்டமே. = பொருளே
என்னய்யா, இன்னுமா எடுக்கல, சீக்கிரம் எடுங்கள் என்று ஊர் கூடி கோபித்து அனுப்பும் இந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருகிறீர்கள் என்று கேட்கிறார் நாவுக்கரசர் .
பதில் ?
No comments:
Post a Comment