இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை
வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்காதவர் யார் ?
துன்பம் வரும் போது ...எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்...எல்லாருக்கும் நல்லது தான் செய்கிறேன். யாருக்கும் ஒரு கெடுதலும் நினைப்பது இல்லை. முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்கிறேன். கடவுள் பக்தி உண்டு. பாவ புண்ணியத்திற்கு பயப்படுகிறேன். பூஜை புனஸ்காரங்களை ஒழுக்காகச் செய்கிறேன்....
இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று அலுத்துக் கொள்ளாதவர் யார் ?
ஏன் என் பிள்ளை இப்படி படிக்காமல் இருக்கிறான், ஏன் என் பெண்ணின் மாமியார் இப்படி இருக்கிறார், ஏன் என் கணவனோ மனைவியோ இப்படி இருக்கிறார்கள், எனக்கென்று ஏன் இப்படி ஒரு மானேஜர் அலுவலத்தில், ஏன் எனக்கு தொழிலில் நட்டம் வருகிறது என்று நொந்து கொள்ளாத யாராவது இருக்கிறார்களா ?
சரி, அப்படியே ஒரு துன்பம் வந்து விட்டாலும், நாம் மலை போல நம்பி இருந்தவர்கள் நம்மை கை விட்டு விடுவதும் நிகழ்வது சாதாரணமாக எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தானே.
அவனுக்கு அல்லது அவளுக்கு எவ்வளவு எல்லாம் செய்தேன்...எனக்கு ஒரு தேவை , அவசரம் என்று வந்த போது உதவி செய்ய யாரும் இல்லையே , இந்த உலகமே நன்றி கெட்ட உலகம் என்று வருந்தாதார் யார் ?
துன்பம் நமக்கு மட்டுமா வருகிறது ?
நம்பியவர்கள் கை விட்டு விடுவது நமக்கு மட்டுமா நிகழ்கிறது ?
சரி, அதற்கும் இந்த சுந்தர காண்டத்திற்கும் என்ன தொடர்பு ?
கம்ப இராமாயணம் எங்கே , அல்லாடும் தள்ளாடும் என் வாழ்க்கை எங்கே...இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?
சம்பந்தம் இருக்கிறது...அது என்ன என்று வரும் நாட்களில் சிந்திப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_8.html
No comments:
Post a Comment