திருக்குறள் - வான் சிறப்பு - உடற்றும் பசி
வான் சிறப்பில் மூன்றாவது குறள்.
இந்த பூமி கடலால் சூழப் பட்டது. கடல் என்றால் நீர் தானே. மழை பெய்யாவிட்டால் என்ன, எவ்வளவு நீர் இருக்கிறது கடலில். சமாளித்துக் கொள்ள முடியாதா என்றால், முடியாது.
மழை பெய்யாவிட்டால், இந்த கடல் சூழ்ந்த உலகில் பசி எல்லோரையும் வருத்தும்.
பாடல்
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_22.html
Pl click the above link to continue reading
விண்ணின்று = விண்ணில் இருந்து
பொய்ப்பின் = மழை பெய்யாமல் பொய்த்து விட்டால்
விரிநீர் = விரிந்த நீரை உடைய கடல்
வியனுலகத்து = பரந்த உலகில்
உண்ணின்று = உணவு இன்றி
உடற்றும் பசி. = வருத்தும் பசி
பசி என்றால் ஏதோ கொஞ்ச பொறுத்துக் கொண்டால், உணவு தயாராகி விடும் என்றல்ல. உணவே வராது. உணவே எங்கும் கிடையாது.
எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? வீட்டில் உணவுப் பொருள்கள் இல்லை. அரிசி, புளி , கோதுமை, காய் கறிகள், பழங்கள், எண்ணெய் என்று எதுவும் இல்லை. கடைகளிலும் இல்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் உணவுப் பொருள்கள் இல்லை.
இன்று போய் விளைவித்தாலும், ஒரு வாரம் பத்து நாள் ஆகும். மழை இல்லாவிட்டால் அதுவும் முடியாது.
அப்படி ஒரு பசி வந்தால், அனைத்து உயிர்களும் பசியால் வாடி இறந்து போகும் அல்லவா?
இந்த உலகில் உயிர்கள் இருக்கக் காரணம், மழை தான்.
மழை என்றால் ஏதோ நீர் ஆவியாகிறது, மழை வருகிறது என்று நாம் எளிதாக நினைத்துக் கொள்கிறோம். அப்படி அல்ல.
மழை என்பது உயிர்.
நம் உறவுகள் அனைத்தையும் நம்மோடு சேர்த்து வைத்து இருப்பது, மழை.
இந்த உலகம் உயிர்களோடு, அழகாக இருக்கக் காரணம் மழை.
எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறார்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.
No comments:
Post a Comment