Pages

Thursday, March 11, 2021

திருக்குறள் - ஒரு முன்னுரை

 திருக்குறள் - ஒரு முன்னுரை 


திருக்குறளை பள்ளியில் படித்து இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறள்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும். அதில் சில குறள்கள் மனப்பாடச் செய்யுள் பகுதியில் வரும். அதை மனப்பாடம் பண்ணி அப்படியே எழுத்து பிசகாமல் எழுத வேண்டும். 


மற்றபடி எத்தனை மதிப்பெண் உண்டோ, அதற்கு தகுந்தாற்  போல பதில் எழுதினால் போதும். இரண்டு மதிப்பெண் என்றால் நான்கு வரி எழுத வேண்டும். பத்து மதிப்பெண் என்றால் சற்று விரித்து எழுத வேண்டும். 


இடையிடையே இலக்கண குறிப்பு, சொல் இலக்கணம், அணி இலக்கணம், யாப்பு இலக்கணம் என்று சில கேள்விகள் வரும். 

மதிப்பெண் பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது. 

அதற்குப் பின், சில புத்தகங்களில் மேற்கோளாக சில பல குறள்கள் வந்திருக்கலாம். 


நமது குறள் பரிச்சியம் அவ்வளவுதான். 


"நல்லா சுருக்கமா அழகா எழுதி இருக்கிறார்" என்று சொல்லி விட்டு போய் விடுவோம். 


திருக்குறள் என்ற பிரமாண்டத்தை, அதன் விஸ்வரூபத்தை நாம் அறியவே இல்லை. 

சொன்னால்தானே தெரியும். 


இந்த ப்ளாகில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல குறள்களை நாம் பார்த்தோம்.    அது குறளுக்கு நான் செய்த தவறு. பிழை. 


திருக்குறளை அப்படி படித்து இருக்கக் கூடாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_11.html

(click the above link to continue reading)


குறளில், முதலில் இருந்து கடைசி வரை ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு வரைமுறை இருக்கிறது. அதை, அதன் போக்கில் படித்தால்தான் முழுவதும் விளங்கும். 


அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தால், குருடர்கள் யானையை பார்த்த கதையாகி விடும். 


பரிமேல் அழகர் அடி பற்றி திருக்குறளை முதலில் இருந்து எழுத ஆசை. 


பரிமேலழகர் உரையும் மிகவும் இறுக்கமான உரை. ஆனால் மிக அழகானது. ஆழமானது. அவர் அளவுக்கு வேறு யாரும் உரை செய்து இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். 


இந்தத் திருக்குறள் என்ற நூல் என்னதான் சொல்ல வருகிறது? இதை ஏன் நாம் படிக்க வேண்டும்? படித்தால் என்ன பலன் ? இதை எழுதியதன் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் தரும் முகமாக உரைப்பாயிரம் செய்கிறார் பரிமேலழகர். 


நாளை முதல் அவர் கை பிடித்து குறளுக்குள் செல்வோம். 



5 comments:

  1. ஆஹா போகலாமே..on one condition. You have to finish all 1330 kurals in 1330 days. :)

    ReplyDelete
  2. உங்கள் கை பிடித்து நாங்களும் வருகிறோம்

    ReplyDelete
  3. இதைத் தான் எதிர் பார்த்து காத்திருந்தோம் தலைவரே .....
    வணக்கம்.

    ReplyDelete
  4. ஆவலை தூண்டி விட்டீர்கள்.ஒரு நாளைக்கு ஒரு குறள் என்றால் கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் முடிந்து விடும். எனக்கு அவ்வளவு அவகாசமில்லை! நாளொன்றுக்கு ஐந்து முடியுமா?

    ReplyDelete
  5. இது தவிர வழக்கம் போல் கம்ப ராமாணம், ஆழ்வார்கள் பாசுரங்கள், பற்பல சைவ பெரியோர்களின் கவிதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் விடமுடியாது!
    பெரிய சுமைதான்!

    ReplyDelete