Pages

Thursday, May 20, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 2

 

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 2 


இந்த குறளுக்கு எப்படி விளக்கம் சொல்லுவது என்ற மலைப்பில் சில நாட்கள் போய் விட்டன. ஒன்று மிக விரிவான ஆழமான குறள்.  இரண்டாவது, முழுவதுமாக புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத  மாதிரியும் இருக்கு. 


முடிந்தவரை விவரிக்க முயற்சி  செய்கிறேன். 


பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html

(pl click the above link to continue reading)



சுவை = சுவை 

ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முதல் பகுதியை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

)


"ஐந்தின் வகை தெரிவான்" ஐந்தின் வகை என்றால் என்ன ?  


இந்த ஐந்து பூதங்களின் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிதல் என்று பொருள் எடுக்கிறார் பரிமேலழகர். 


இவற்றின் கூறுபாடுகளை அறிந்து கொள்வது என்றால், நாம் தத்துவங்களை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். 


இந்த பஞ்ச பூதங்கள் எப்படி தோன்றின? எங்கிருந்து தோன்றின ? அதை தோற்றுவித்தவர் யார்? எப்போது தோற்றுவிக்கப்பட்டது?  இந்த பஞ்ச பூதங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?  நாம் அவற்றை எவ்வாறு அறிந்து கொள்கிறோம்? நாம் அறிந்தது மட்டும்தான் உண்மையா? நம் புலன்களும், கருவிகளும் நுண்மையாக நுண்மையாக நமக்கு மேலும் மேலும் ஆழ்ந்த உண்மைகள் புலப்படுகின்றனவே.  அப்படியானால், நாம் இன்று அறிந்து வைத்து இருப்பது முடிவானது அல்ல என்று தெரிகிறது. அப்படியானால், அவற்றிற்கு ஒரு முடிவே இல்லையா? இந்த பஞ்ச பூதங்களை நாம் முழுவதுமாக அறிந்து கொள்ளவே முடியாதா?


இந்தக் கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். இவற்றிற்கு நாம் கட்டாயம் விடை காண்போம் 


அதற்கு முன், 


இந்தக் கேள்விகள் ஒன்றும் இன்று எழுந்தவை அல்ல. காலம் காலமாக மனிதன் இந்தக் கேள்விகளை கேட்டு, அவற்றுக்கு விடை தேடி அலைந்து கொண்டு இருக்கிறான். 


எவ்வளவோ பெரியவர்கள் வந்து இந்தக் கேள்விகளுக்கு பல விதங்களில் விடை தந்து இருக்கிறார்கள். 


ஒவ்வொருவரும் ஒரு வழியில் போய் இருக்கிறார்கள். 


பல அறிஞர்கள், பல தத்துவங்கள். 


ஒவ்வொரு மதமும் ஒரு தத்துவத்தை முன் நிறுத்துகிறது. நாங்கள் சொல்லும் தத்துவமே உண்மை என்றும் மற்றவை எல்லாம் பொய் என்றும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றன. 


நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். 


ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டும் அல்லவா? உலகம் முழுவதும் சுத்திப் பார்க்க வேண்டும் என்றாலும், ஏதோ ஒரு இடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் அல்லவா?  அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படியும் உலகம் முழுவதையும் சுற்றப் போகிறோம். 


எந்த தத்துவமும் உயர்ந்ததும் அல்ல. தாழ்ந்ததும் அல்ல. அவை உண்மையை அறிய ஒரு கருவி அவ்வளவுதான். 


எனவே, அந்தத் தத்துவம் சரி, இது தவறு என்று வீணான வாதங்களை நாம் விட்டு விடுவோம். 


பரிமேலழகர் சாங்கிய தத்துவத்தை எடுக்கிறார். 


நீங்கள் சாங்கிய தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அது இந்தியாவின் பழமையான தத்துவம்.  பகவத் கீதை போன்ற நூல்களுக்கு முந்தையது. கீதையில் சாங்கிய யோகம் என்று ஒரு பகுதியே உண்டு. 


திருவள்ளுவர் சாங்கிய தத்துவம் பற்றி கூறவில்லை. பரிமேலழகர் உரையில் அதைக் கொண்டு வருகிறார். 


நீங்கள் எந்தத் தத்துவத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  


"ஐந்தினை" அறிய வேண்டும். எப்படி அறிந்தால் என்ன? 


எனவே, நாம் சாங்கிய தத்துவத்தில் இருந்து ஆரம்பிப்போம். 


சாங்கிய தத்துவத்தில் மொத்தம் 25 தத்துவங்கள் உண்டு. 


அவற்றை இனி வரும் ப்ளாகுகளில் நாம் காண இருக்கிறோம். 





3 comments:

  1. கற்று கொள்ள ஆவலாக இருக்கிறோம்!

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய நண்பருக்கு பணிவான வணக்கங்கள் . முதன்முறை உங்கள் இணைய தள பக்கத்தைப் பார்க்கும் பாக்யம் பெற்றேன் இன்று. உங்கள் அளப்பரிய பணிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும். இப்பணி நீண்ட காலம் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்

    ReplyDelete