Pages

Tuesday, June 22, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - இல்லறம் - ஒரு முன்னோட்டம் 


இல்லறம் என்றால் என்ன? 


திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது, அவர்களை நல்ல விதமாக வளர்ப்பது, வயதான காலத்தில் பெற்றோர்களை பேணுவது  என்பதுதான் இல்லறமா? 


ஒரு குடும்பத்துக்குள் நடப்பதுதான் இல்லறமா? 


நான், என் குடும்பம், என் கணவன்/மனைவி, என் பிள்ளைகள், என் பெற்றோர் என்று இருப்பதுதான் இல்லறமா? 


திருமணம் செய்து கொள்வது எதற்கு? இன்பம் அனுபவிக்கவும், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவும் மட்டுமா? 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது மிக பிரமாண்டமானது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_22.html

(click the above link to continue reading)


இல்லற வாழ்கையை இதற்கு மேல் விரிவாக, ஆழமாக, நுட்பமாக சொல்லவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம். 


இல்லறத்தின் ஒவ்வொரு பாகத்தையும், படியையும் ஒரு அதிகாரமாக படைக்கிறார். 


மிகச் சிறபானா இல்லற வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் வள்ளுவர் சொல்லும் வழியை கடைப் பிடித்தால் போதும். 


ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு கட்டமாக நம்மை அழைத்துச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல, இந்த திருமணம், பிள்ளைகளை பெறுவது, வளர்ப்பது எல்லாம் எதற்காக? ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், மணந்தோம், பிள்ளைகளைப் பெற்றோம், வளர்த்தோம், மறைந்தோம் என்று முடிந்து விடுவதா இல்லறம்? ஒரு அர்த்தம், நோக்கம் இல்லையா? இதை ஏன் செய்ய வேண்டும்? 


இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக இருந்தால் என்ன என்று கேட்கிறார்கள். அதற்கு சட்ட ரீதியாக அங்கீகாரமும் கிடைக்கிறது.  அது சரியா தவறா என்று நாம் விவாதம் செய்ய வேண்டாம். வள்ளுவர் போன்ற பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிந்து கொள்வோம். 


இதற்கு ஒரு படி மேலே போய், ஆணும் பெண்ணும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? ஆணும் ஆணுமோ அல்லது பெண்ணும் பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளக் கூடாதா என்றும் கேட்கிறார்கள். அப்படி திருமணமும் செய்து கொள்கிறார்கள்.  அவை சரியா தவறா என்று தெரியாமல் ஒரு மயக்கம் இருக்கிறது. சரி என்று சொல்பவர்கள் வாதத்திலும் ஞாயம் இருக்கிறது போல் தெரிகிறது. தவறு என்று வாதம் செய்பவர்கள் பக்கமும் ஞாயம் இருப்பது போலத் தெரிகிறது. 


இல்லறத்தின் கடமைகள் என்ன, அதன் நோக்கம் என்ன, ஒரு சிறப்பான இல்லறம் என்றால் எப்படி இருக்க வேண்டும், அப்படி சிறப்பாக வாழ்ந்தால் என்னென்ன நன்மைகள், பலன்கள் கிடைக்கும், இல்லறத்தின் அடுத்த கட்டம் என்ன என்றெல்லாம் மிக மிக விரிவாக விளக்குறார் வள்ளுவர். 


வரும் நாட்களில் இவற்றைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


சிந்திப்போமா?

1 comment:

  1. நல்ல துவக்கம் ...சிந்திப்போம் ...சொல்லுங்கள் அண்ணா ..நன்றி

    ReplyDelete