கம்ப இராமாயணம் - ஒள்ளியது உணர்ந்தேன்
பகை என்று வந்து விட்டால் அதை சாம, தான, பேத, தண்டத்தால் தீர்க்க முயல வேண்டும்.
முதலில் சமாதானத்திற்கு முயல வேண்டும். எடுத்தவுடனேயே சண்டைக்குப் போகக் கூடாது. முடியவில்லை என்றால் எதிரியின் பலத்தைக் குறைக்க வேண்டும் (பேதம்), அதுவும் இல்லை என்றால் தானம் செய்து, பொருள் கொடுத்து பகையை முடிக்க வேண்டும். இது எதுவும் நடக்கவில்லை என்றால், கடைசியில் தண்டம் அதாவது தண்டனை அல்லது போர் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
சமாதானத்தின் முதல் முயற்சி தூது அனுப்புவது. நமது இல்லக்கியங்களில் பல தூதுகள் நிகழுந்து இருக்கின்றன. எல்லா தூதும் தோல்வியில்தான் முடிந்தது ஒன்றே ஒன்றைத் தவிர.
பாண்டவர்களுக்காக, கண்ணன் தூது போனான். தூது தோற்று, சண்டை மூண்டது.
முருகனுக்காக வீரபாகு தூது போனார், தூது தோற்றது.சண்டை வந்தது.
இராமனுக்காக அங்கதன் தூது போனான். தூது தோற்று சண்டை மூண்டது.
வெற்றி பெற்ற தூது சுந்தரருக்காக் சிவ பெருமான் சென்ற காதல் தூது. அது வென்றது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
இங்கே அங்கதன் தூது பற்றி பார்ப்போம்.
கம்ப இராமாயணத்தில் ஒரு சிறு பகுதி. மிக அழகான பகுதி. சில சிக்கல்களை விடுவிக்கும் பகுதி.
படையோடு இராமன் இலங்கையை சூழ்ந்து நிற்கிறான். இலங்கையின் வடக்குப் புற வாசல் அருகே இராவணனை எதிர்பார்த்து நிற்கிறான். இராவணன் வரவில்லை.
அருகில் நின்ற வீடணனிடம் இராமன் கூறுவதாக இந்தப் பகுதி ஆரம்பிக்கிறது.
பாடல்
வள்ளலும் விரைவின் எய்தி, வட திசை வாயில் முற்றி,
வெள்ளம் ஓர் ஏழு-பத்துக் கணித்த வெஞ் சேனையோடும்,
கள்ளனை வரவு நோக்கி, நின்றனன், காண்கிலாதான்,
'ஒள்ளியது உணர்ந்தேன்' என்ன, வீடணற்கு உரைப்பதானான்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_18.html
(please click the above link to continue reading)
வள்ளலும் = வள்ளலாகிக்ய இராமனும்
விரைவின் எய்தி = விரைந்து சென்று அடைந்து
வட திசை வாயில் முற்றி, = இலங்கையின் வடக்குப் புற வாயிலை அடைந்து
வெள்ளம் ஓர் ஏழு-பத்துக் = எழுபது வெள்ளம் சேனைகளோடு
கணித்த = எழுபது வெள்ளம் என்று கண்ணிதுச் சொல்லப்பட்ட
வெஞ் சேனையோடும், = கொடுமையான சேனைகளோடு
கள்ளனை வரவு நோக்கி = கள்ளமாக ஜானகியை கவர்ந்து சென்ற இராவணனின் வரவு நோக்கி
நின்றனன் = இராமன் நின்றான்
காண்கிலாதான், = இராவணன் வராததால் அவனை காண முடியாமல் இருந்தான்
'ஒள்ளியது உணர்ந்தேன்' = ஒளி பொருந்திய, அதாவது புகழுக்கு உரிய செயல் ஒன்றை உணர்ந்தேன்
என்ன = என்று
வீடணற்கு உரைப்பதானான்: = வீடணனுக்கு சொல்லத் தொடங்கினான்
No comments:
Post a Comment