Pages

Sunday, September 26, 2021

திருக்குறள் - உடலுக்கும் செவிக்கும் இன்பம்

 திருக்குறள் - உடலுக்கும் செவிக்கும் இன்பம் 


பாடல் 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_26.html


(Please click the above link to continue reading)



மக்கள் = குழந்தைகள் 


மெய் தீண்டல் = உடலைத் தீண்டல் 


உடற்கின்பம் = உடலுக்கு இன்பம் 


மற்று = மற்று 


அவர் = அவர்கள் 


சொற் கேட்டல் = சொல்லுவதைக் கேட்டல் 


இன்பம் செவிக்கு = செவிக்கு இன்பம் 


மிகவும் எளிமையான குறள். 


ஒரு சில நுணுக்கமான விடயங்கள். 


"மக்கள் மெய் தீண்டல்" என்றால், பிள்ளைகள் நம்மை தீண்டுவதா அல்லது நாம் பிள்ளைகளை தீண்டுவதா? பிள்ளைகள் ஓடி வந்து நம்மைக் கட்டிக் கொள்வது ஒரு சுகம். நாம் ஓடிச் சென்று பிள்ளையை வாரி அணைத்துக் கொள்வதும் சுகம்.  எப்படிப் பார்த்தாலும் மெய் தீண்டல் இன்பம் தான். 


"சொற் கேட்டல்"  என்று கூறினார். மழலைச் சொல் என்று சொல்லவில்லை.  குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்னும், அவர்கள் சொல்வதைக் கேட்பது சுகம்தான்.  பிள்ளைகள் ஒவ்வென்றாக படித்து, அறிந்து, அனுபவம் கொண்டு வந்து சொல்வதும் இன்பம் தான். "இன்னிக்கு பள்ளிக் கூடத்தில் என்ன நடந்தது தெரியுமா" என்று விழி விரிய சொல்வதைக் கேட்பதும் இன்பம்.


பேசுவதைக் கேட்க ஆயிரம் தொழில் நுட்பம் வந்து விட்டது. 


மெய் தீண்டல் தான் இன்னும் முடியவில்லை.








1 comment:

  1. பிள்ளைகள் வளர்ந்தபின், "நான் இந்தப் படிப்புதான் படிப்பேன், இந்த வேலைதான் பார்ப்பேன், இன்னாரைத்தான் மணப்பேன்" என்று சொல்லும்போது, பல பெற்றோருக்கு அது தேனாக இனிப்பதில்லை!

    ReplyDelete