சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - உலகம் - பொருளும் செயலும்
எந்த அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி என்றாலும் அது எடுத்துக் கொண்ட பொருளின் அடிப்படை என்ன என்று ஆராயும்.
உதாரணமாக, இயற்பியல் (physics) என்ற அறிவியல் பகுதி பொருள்களின் செயல்பாடுகளைப் பற்றி ஆராயும் போது, இந்த உலகில் எத்தனையோ பொருள்கள் இருந்தாலும், அவை எல்லாம் அணு என்ற ஒன்றால் ஆனது என்று கண்டு சொன்னது. அணுவைப் புரிந்து கொண்டால் இந்த உலகைப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பொருளாக ஆராய வேண்டியது இல்லை. அணுவை ஆராய்ந்தால் போதும். அதனுள் எல்லாம் அடக்கம். அதன் எல்லைகள் மேலும் விரிந்து அணு அல்ல அடிப்படை, ப்ரோட்டான், நியுட்ரான், எலெக்ட்ரான் என்ற நுண்ணிய துகள்கள்தான் அடிப்படை என்று ஆனது. பின் மேலும் விரிந்து அடிப்படை துகள்கள் (fundamental particles) என்று போகிறது. எது மூல காரணமோ அதைப் பிடித்து விட்டால், எல்லாம் புரிந்து விடும்.
உயிரியல் என்று சொல்லப்படும் அறிவியல் பிரிவு, உலகில் எத்தனையோ ஜீவ இராசிகள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை செல் (cell) என்று கண்டு தெளிந்தது. செல் பற்றி தெரிந்து கொண்டால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், தாவரங்களையும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றாக ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
உலகில் எத்தனையோ விதமான சக்திகள் இருந்தாலும், எல்லாம் அடிப்படையில் நான்கே நான்கு சக்திகள் தான்.
புவி ஈர்ப்பு விசை (gravitational force)
மின் காந்த விசை (electro magnetic force)
உயர் அணு விசை (strong nuclear force)
தாழ் அணு விசை (weak nuclear force)
இந்த நான்கு விசைகளைத் தாண்டி இன்னொரு சக்தி கிடையாது.
இப்படி ஒவ்வொரு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் தான் எடுத்துக் கொண்ட இயலின் அடிப்படை என்ன என்று ஐந்து கொள்ள முற்படுகிறது.
இப்போது சிவஞான போததிற்குள் வருவோம்.
https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_18.html
(pl click the above link to continue reading)
இந்த உலகம் எதனால் ஆனது என்ற கேள்விக்கு விடை காண முயல்கிறது சிவஞான போதம்.
இந்த உலகம் மூன்றே மூன்றால் ஆனது. அதற்கு வெளியில் எதுவும் இல்லை என்று முதலில் உலகம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்கி விடுகிறது.
அந்த மூன்று சொற்கள்
"அவன், அவள், அது"
இதற்கு வெளியில் உலகம் என்று ஒன்று இருக்கிறதா? எல்லாமே இந்த மூன்றனுள் அடக்கம்.
சரி, இந்த மூன்றும் எவ்வளவோ வேலை செய்கின்றன. என்னென்ன வேலைக்கள் செய்கின்றன? எத்தனை விதமான வேலைகள் இருக்கின்றன என்று ஆராய முற்பட்ட சிவஞான போதம் சொல்கிறது, அனைத்து உயிர்களும் மூன்றே மூன்று தொழிலைத் தான் செய்கின்றன.
அந்த மூன்று தொழில்கள்
"பிறத்தல், இருத்தல், இறத்தல் "
இதுவன்றி வேறு தொழில் இல்லை.
மூன்று பொருள்கள், மூன்று செயல்கள்.
சரிதானே?
இது புரிந்துவிட்டால், அனுமான பிரமாணம் கொண்டு மற்றவற்றை நிரூபிக்கலாம்.
இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய நிரூபணம் செய்ய முடியும் என்று நினைப்போம்.
மேலும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment