திருக்குறள் - இதுவரை - பாகம் 5
https://interestingtamilpoems.blogspot.com/2024/01/5.html
1, அறன் வலியுறுத்தல்,
2. இல்வாழ்க்கை,
3. வாழ்க்கைத் துணைநலம்,
4. புதல்வர்களைப் பெறுதல்,
5. அன்புடைமை, மற்றும்
6. விருந்தோம்பல்
7. இனியவை கூறல்
8.செய்நன்றி அறிதல்
9. நடுவு நிலைமை
10. அடக்கமுடைமை
11. ஒழுக்கமுடைமை
12. பிறனில் விழையாமை
13. பொறையுடைமை
14. அழுக்காறாமை
15. வெஃகாமை
இதுவரை மேலே உள்ள 15 அதிகாரங்களை சிந்தித்தோம்.
புறங்கூறாமை
அழுக்காறாமை, வெஃகாமை என்ற இரண்டும் மனதின் கண் நிகழும் குற்றங்கள். அதை அடுத்து மொழியின் கண் குற்றங்கள் பற்றி கூற இருக்கிறார். அதில் முதலாவதாக, புறங்கூறாமை பற்றி கூறுகிறார். அதாவது, ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் கூறுவது. இது தேவையில்லாத ஒன்று. ஒருவர் தவறு செய்தால், அது தவறு என்று தெரிந்தால், அதை அவரிடமே நேரிடையாகவே கூறலாமே. அவர் இல்லாத போது கூறுவது என்பது நடந்ததை திரித்துக் கூறவே உதவும். அதனால் ஒரு பயனும் விளையாது.
பயனில சொல்லாமை
சொல்லில் ஏற்படும் குற்றங்கள் நான்கு. அவை பொய், குறளை, கடும் சொல், பயனில சொல் என்பவை. இதில் இல்லறத்தில் உள்ளவன் பொய்யே சொல்லாமல் இருக்க முடியாது. ஒன்றும் இல்லாவிட்டால் கூட மனைவியை "நீ இரதி மாதிரி இருக்கிறாய்' என்று பொய் சொல்லத்தான் வேண்டும். இல்லை என்றால் இல்லறம் சிறக்காது. பொய்யை முற்றும் விலக்க துரவியால்தான் முடியும் என்பதால், அதை துறவறத்தில் வைத்தார். கடும் சொல்லை தவிர்க்க இனியவை கூறல் என்ற அதிகாரம் வைத்தார். மீதி இருக்கும் புறங்கூறாமை மேலே சொல்லிவிட்டபடியால், அடுத்து பயனில சொல்லாமை பற்றி கூறுகிறார். தனக்கும், பிறருக்கு, இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை கூறாமல் இருப்பது.
தீவினையச்சம்
மனதின் கண் நிகழும் குற்றங்களும், வாக்கின் கண் நிகழும் குற்றங்களும் சொல்லிய பின், உடலின் கண் நிகழும் ஏனைய குற்றங்கள் பற்றி தொகுத்து ஒரே அதிகாரத்தில் கூறினார். தீய வினைகள் செய்ய அஞ்ச வேண்டும். அச்சம் வந்தால் தானே அதில் இருந்து விலகி விடுவோம். தவறான காரியம் செய்தால் மானம் போய்விடுமே என்ற அச்சம், தண்டிக்கப் படுவோம் என்ற அச்சம் இருந்தால் தவறான காரியங்கள் செய்ய மாட்டோம்.
மேலும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment