Pages

Saturday, March 31, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - கிளரொளி

"கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம்.

இளமை எவ்வளவு இனிமையானது.

அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக
தளர்ச்சி வந்து சேரும் .

வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும்.

இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது.

எனவே, இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால்
சேர்ந்து இருப்பது புத்திசாலி தனம் என்கிறார் நம்மாழ்வார்...(சொன்னா எங்கய
கேக்குராங்க்ய ... கடவுள் இல்லை , இருந்தா காமி பாப்போம் அப்படின்னு வாதம்
பன்றாங்க்ய ... தருதல புள்ள குட்டிக தாயே )

கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர் விலராகிச் சார்வதுசதிரே.


கிளரொளியிளமை = கிளர் ஒளி இளமை

கெடுவதன் முன்னம் = முடியுமுன் (முதுமை வருவதற்கு

முன்னால்)வளரொளி = வளரும் ஒளி, வளர்ந்த ஒளி, வளரும் ஒளி

மாயோன் = கண்ணன், திருமால்

மருவிய கோயில் = உள்ள கோயில் வளரிளம் = வளர் இளம்

பொழில் = பூங்கா

சூழ் = சூழ்ந்த

மாலிருஞ்சோலை = மால் இருக்கும் சோலை தளர்

விலராகிச் = தளர்ச்சி இல்லாமல்

சார்வதுசதிரே = சார்வது சதிரே = சேருவது மேலும் புத்திசாலிதனம்

No comments:

Post a Comment