Pages

Monday, April 23, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை


கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை


கும்பகர்ணனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமா ? கிண்டலும் கேலிப் பேச்சும் அவனுக்கு வருமா ?
  
 வரும் என்று கம்பன் காட்டுகிறான். 

  
 யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் கும்பகர்ணன், இராவணனிடம் சொல்கிறான். 

  
  
 "இராவணா, நமக்கு என்ன குறை இருக்கிறது ? காலினால் கடலை கடந்த அனுமன் இருக்கிறான், சிறை விட்டு செல்லாத சீதை இருக்கிறாள், வாலியின் மார்பு துளைத்த இராமனின் அம்புகள் இருக்கின்றன ? அவற்றை வாங்க நாம் இருக்கிறோம் ...நமக்கு என்ன குறை?"

  
 ----------------------------------------------------------
 'காலினின் கருங் கடல் கடந்த காற்றது 

 போல்வன குரங்கு உள; சீதை போகிலள்; 

 வாலியை உரம் கிழித்து ஏக வல்லன 

 கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ? 

 ----------------------------------------------------------
  
 காலினின் = காலால் உந்தி 

  
 கருங் கடல் = கரிய கடலை 

  
 கடந்த = கடந்த, தாண்டி வந்த 

  
 காற்றது போல்வன = காற்றைப் போன்ற 

  
 குரங்கு உள = குரங்கு (அனுமன்) உள்ளான் 

  
 சீதை போகிலள் = சிறை விட்டுப் போகாத சீதை நம்மிடம் இருக்கிறாள் 

  
 வாலியை = வாலியை 

  
 உரம் கிழித்து = வலிமையை கிழித்து 

  
 ஏக வல்லன = போக வல்ல 

  
 கோல் உள; = அம்புகள் உள்ளன (இராமனிடம்)

  
 யாம் உளேம்; = அவற்றை மார்பில் வாங்க நாம் இருக்கிறோம் 

  
 குறை உண்டாகுமோ? = நமக்கு வேறு குறை என்ன இருக்கிறது ? 

  
  
 கிண்டலு ?...

3 comments:

  1. கிண்டல்தான். ஆனால் ராவணன் எந்தப் பேச்சுக்கும் கேட்கவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. இராவணன் அப்படி கேட்காமல் இருந்ததற்கும் காரணம் சொல்கிறான்....that will be in another blog entry...

      Delete
  2. Your site is great. I am enjoying each and every poem you have published. Keep-up the good work.

    ReplyDelete