Pages

Wednesday, April 11, 2012

கந்தர் அலங்காரம் - கடவுளை அறிய முடியுமா ?




கடவுள்னா என்ன ? அது யாரு ? அவரு எப்படி இருப்பாரு ? எவ்வளவு உயரம் ? என்ன நிறம் ? எவ்வளவு எடை ? எங்க இருக்காரு ? அவர எப்படி போய் பார்க்கலாம் ? அவரு விலாசம் என்ன ?


இப்படி பல காலும் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இதுக்கு என்னதான் விடை ?

இப்படியே போய்கிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?


சில விசயங்களை நேரில் பார்க்க முடியாது. உணர முடியும். இது இப்படி இருக்கலாம் என்று யூகிக்க முடியும்.
கடவுளை உணர முடியும், அறிய முடியாது என்கிறார் அருணகிரி நாதர் கீழ் கண்ட பாடலில் 

---------------------------------------------------------------

வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே
----------------------------------------------------------------

சீர் பிரித்த பின்

------------------------------------------------------------------------
வேலே விளங்கும் கையான் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி
மாலே கொள விளங்க காண்பதல்லால் மன வாக்கு செயலால்
அடைதற்கு அரிதாய் அரு உருவாகி ஒன்று
போலே இருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே
------------------------------------------------------------------------
 

 

 
வேலே விளங்கும் கையான் = வேலை கையில் உள்ள முருகன்
 
செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி = அவன் காலில் விழுந்து, இறைஞ்சி (வேண்டி )
 
மாலே கொள = அன்பு கொண்டு, பக்தி கொண்டு
 
விளங்க காண்பதல்லால் = விளங்கி கொள்வதல்லால்
 
மன வாக்கு செயலால் = மனம், வாக்கு, செயல்களால்
 
அடைதற்கு அரிதாய் = அடைய முடியாத
 
அரு உருவாகி ஒன்று = அருவமாகி, உருவமாகி
 
ஒன்று போலே இருக்கும் பொருளை = ஒன்று போல இருக்கும் ஒரு பொருளை
 
எவ்வாறு புகல்வதுவே = எப்படி சொல்லுவது ?
 
 
அதாவது, இறைவனை நம் புலன்காளால் அறிய முடியாது. மனம், வாக்கு, செயல்களால் அறிய முடியாது. அவன் மேல் பக்தி கொண்டு உணரலாம்.
 
 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மாணிக்க வாசகர்.
 
--------------------------------------------------------------
எலும்பே விறகாக இறைச்சி அறுத்து இட்டு
பொன் போல கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்கன்றி
என் பொன் மணியினை எத்த வொண்ணாதே - திரு மந்திரம்
--------------------------------------------------------------
 
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே - கந்தர் அநுபூதி

2 comments:

  1. This is a little bit of a circular argument. It is like saying: "You have to first believe in god. Then you will see that he exists." What kind of logic is this? It should be the other way around!

    ReplyDelete
  2. This is like our mathematical problem. First we assume x= something and then prove that it is right. The same way we need to believe, enjoy the feeling and then realise.

    ReplyDelete