இராவணன் வணங்கா முடியன். எதற்கும் எந்த காலத்தும் தலை வணங்காதவன்.
அதை எப்படி கற்பனை கலந்து இரசனையோடு சொல்வது ?
கம்பன் யோசிக்கிறான்.
காதல் புரியும் போது எந்த ஆணும், பெண்ணிடம் இறங்கி வந்து தான் ஆக வேண்டும். ஆனால், இராவணன், அந்த சமயத்தில் கூட தலை வணங்க மாட்டானாம்...
கம்பனின் கற்பனை வளம் நிறைந்த அந்தப் பாடல்....
புலியின்அதள் உடையானும் பொன்னாடை
புனைந்தானும் பூவி னானும்
புனைந்தானும் பூவி னானும்
நலியும் வலத்தர் அல்லர்; தேவரின் இங்கு
யாவர்இனி நாட்ட வல்லார்?
மெலியும்இடை தடிக்கும்முலை வேய்இளந்தோள்
சேயரிக்கண் வென்றி மாதர்
வலியநெடும் புலவியினும் வணங்காத
மகுடநிரை வயங்க மன்னோ
புலியின்அதள் உடையானும் = புலித்தோலை உடுத்திய சிவனும்
பொன்னாடை புனைந்தானும் = பட்டு பீதாம்பரம் அணிந்த திருமாலும்
பூவி னானும் = தாமரை பூவில் அமர்ந்த பிரமனும்
நலியும் வலத்தர் அல்லர் = இவனை நலிவு அடைய செய்யும் வல்லமை உடையவர்கள் அல்ல. அவ்வளவு வலிமை உடையவன்
தேவரின் இங்கு யாவர்இனி நாட்ட வல்லார் = அப்பேற்பட்ட தேவர்களாலேயே முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்
மெலியும்இடை = மெலிந்த இடை. அதுகூட இல்லை, மெலியும் இடை. மெலிந்து கொண்டே இருக்குமாம் அந்த பெண்களின் இடை. இது கொஞ்சம் ஓவர்.
தடிக்கும்முலை =
வேய்இளந்தோள் =வேய் என்றால் மூங்கில். மூங்கில் போன்ற இளமையான தோள்
சேயரிக்கண் = மீன் போன்ற கண்
வென்றி மாதர் = அந்த மாதிரி பெண்கள்
வலியநெடும் புலவியினும் = அவர்களோடு புணரும் காலத்திலும்
வணங்காத மகுட = வணங்காத மகுடத்தை உடையவன்.
அதாவது பெண்களிடம் கூட கெஞ்சுவது, கொஞ்சுவது என்பது எல்லாம் கிடையாது.
அந்த நேரத்தில் கூட, அவரு கிங்கு தான்.
நிரை வயங்க மன்னோ = அப்படிப்பட்ட அவனுடைய பெருமையை சொல்ல முடியுமா ?
Fantastic poem! It really brought a smile to me.
ReplyDelete