Pages

Saturday, April 28, 2012

அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு


அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு

நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் காரைக்கால் அம்மையார். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

இந்து மதம் பெண்களுக்கு துறவை அனுமதிக்கவில்லை. மணிமேகலை துறவு பூண்டாள், அவள் சமண சமயத்தை சார்ந்தவள்.

ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

அவர் எழுதிய பாடல்கள் பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. அதில், அற்புத திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்....



அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு

சிவனே, உன் கையில் அனலை ஏந்தி இருக்கிறாய். அந்த அனலினால் உன் கை சிவந்ததா ? அல்லது உன் கையின் சிவப்பினால் அனல் சிவந்ததா ? சுடு காட்டில் பேய்களோடு இணைந்து ஆடுபவனே, நீயே சொல்.

அழலாட = தீ ஆட

அங்கை சிவந்ததோ = அந்த கை சிவந்ததா?

அங்கை அழகால் = அந்த கையின் அழகால்

அழல்சிவந்த வாறோ = நெருப்பு சிவந்ததா?

கழலாடப் = காலில் அணிந்த கழல் ஆட

பேயோடு = பேய்களோடு

கானிற் = சுடுகாட்டில்

பிறங்க = பிறழ்ந்து, இணைந்து

அனலேந்தித்  தீயாடு வாய் = அனல் ஏந்தி ஆடுவாய்

இதனைச் செப்பு = நீயே சொல்லு


3 comments:

  1. நல்ல கற்பனை!

    ReplyDelete
  2. செப்பு தெலுங்கு !! மொழி தமிழியிருந்துச் சென்று இருக்க வேண்டும்

    ReplyDelete
  3. It is amazing to know the high standards of Tamil some several centuries back!

    ReplyDelete