இராமன் கடவுளா ? அவன் கடவுளின் அவதாரமா ? இதைப் பற்றி கம்பன் என்ன சொல்கிறான்
?
அப்படி கம்பன் சொன்ன ஒரு இடம்
----------------------------------------------------------
தேறினன்- 'அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ;
ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது' அன்றே!

தேறினன் = தெரிந்தான் (சுக்ரீவன்)
அமரர்க்கு எல்லாம் = தேவர்களுக்கு எல்லாம்
தேவர் ஆம் தேவர் = தேவாதி தேவன்
அன்றே மாறி = அன்று மாறி
இப் பிறப்பில் வந்தார் = இந்த பிறவியில் வந்தார்
மானிடர் ஆகி மன்னோ = மானிடர்களாக
ஆறு கொள் சடிலத்தானும் = தலையில் ஆறு கொண்ட சிவனும்
அயனும் = பிரம்ம தேவனும்
என்று இவர்கள் ஆதி = என்று இவர்களை முதலாக
வேறு உள குழுவை எல்லாம், = வெவ்வேறான கூட்டத்தையெல்லாம் (கந்தர்வர், யக்ஷர் போன்றோர்)
மானுடம் வென்றது' அன்றே! = மானுடம் வென்றது
மறுபடியும் கம்பன் நம்மை சுத்தலில் விடுகிறான்.
இராமன், திருமாலின் அவதாரம் என்று ஒரு வரியில் சொல்லி இருக்கலாம்.
சொல்லவில்லை. சிவனும், பிரம்மனும் மற்ற தேவர்களும் என்று எல்லோரையும் சொல்லிவிட்டு, திருமாலை மட்டும் விட்டு விடுகிறான்.
அப்ப மானிடராய் பிறந்தது யாரு என்ற கேள்விக்கு மறைமுகமான விடை விஷ்ணு என்பதுதான்.
இராமன் அவதாரமா இல்லையா என்ற முடிவை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறான் கம்பன்.

No comments:
Post a Comment