Pages

Tuesday, April 10, 2012

திரு மந்திரம் - அன்பே சிவம்


அன்பே சிவம். 

திரு மூலர் எழுதிய திரு மந்திரம் 3000 பாடல்களை கொண்டது.

தமிழ் மூவாயிரம் என்று அதற்க்கு இன்னொரு பெயரும் உண்டு. 

'ஒன்றே குலம், ஒருவனே தேவன்'
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'

என்ற அர்த்தம் செறிந்த வரிகளை தந்தவர் திரு மூலர். 

திரு மந்திரத்தில் இருந்து ஒரு அருமையான பாடல் .....


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் = அன்பு வேறு சிவம் வேறு அல்ல.
அப்படி வேறு படுத்தி பார்ப்பது அறிவீனர் செயல்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் = அன்பே சிவம் ஆவது எல்லோருக்கும் தெரியாது
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் = அப்படி அன்பே சிவம் ஆனதை அறிந்தவர்கள்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே! = அன்பும் சிவமும் இரண்டற கலந்த நிலையை அடைவார்கள் 




5 comments:

  1. Such a simple song. We can read it even today and understand it!

    ReplyDelete
  2. Yes. That is the beauty of Thiru Mandhiram.

    ReplyDelete
  3. Replies
    1. You are most welcome. Do you have any other poem list for publishing ?

      Delete
  4. இந்த மாதிரி சுலபமான பாடல்களை ஏன் பள்ளிகளில் சொல்லித் தரதில்லைன்னு தெரியல....திருமூலருக்கு ஓட்டு சேகரிக்கும் பவர் இருந்தா பண்ணுவாங்களா இருக்கும்!!

    ReplyDelete