திருக்குறள் - என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
அவள்: என்ன, இன்னைக்கு என்னவோ புதுசா பாக்கிற மாதிரி பாக்கிற என்னை
அவன்:உன் கண்ணு இருக்கே, அதை இன்னைக்கு எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்...அவ்வளவு அழகு...
அவள்: அவ்வளவுனா எவ்வளவு ?
அவன்: ம்ம்ம்.உன் கண்ணு ஐஸ்வர்யா ராய் கண்ணு மாதிரி so beautiful...
அவள்: (சற்று கோபத்துடன்) நீ ஐஸ்வர்யா ராய் கண்ணை பாத்து இருக்கியா ?
அவன்:நேர்ல இல்ல, இந்த சினிமா மாத இதழ்ல வருதே...அதுல பார்த்தது தான் ...
அவள்:அப்ப நீ, இந்த பொண்ணுங்க படத்தை எல்லாம் பார்த்து ஜொள்ளு விடுற...அப்படி தான ?
அவள்: ம்ம்ம்.. போய் ஐஸ்வர்யா ராய் கிட்ட சொல்லு, அவ ஈ நு பல்லை காட்டிட்டு சொல்லுவா...
நினைத்திருந்து நோக்கினும் காயும், ‘அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர்’ என்று.
நினைத்திருந்து =அவளையே நினைத்து
நோக்கினும் = பார்த்தாலும்
காயும் = சண்டை பிடிக்கும்
‘அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர்’ என்று.= யாரை நினைத்து நீ என்னை இப்படி பார்க்கிறாய் என்று (யாருள்ளி = யார் + உள்ளி . உள்ளி = நினைத்து)
நான் அவளின் அங்க அழகை இரசித்தாலும், "என் அழகை வேறு ஒரு பெண்ணின் அழகோடு ஒப்பிட்டுத் தானே நீ இரசிக்கிறாய் (நினைத்திருந்து), இப்படி ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு பெண் (அனைத்துநீர்) என்றால், எத்தனை பெண்களை நீ நினைத்து கொண்டு என்னை இரசிக்கிறாய்" என்று என் மேல் கோவப் படுவாள்.
(Appeal to the reader: If you like this blog, please click the g+1 button below this blog to express your liking and recommendation. It is just a click. That is all needed, that too, if you like the blog. Thanks)
சும்மா சூப்பர் டயலாக்! தூள் கிளப்புறீங்க!
ReplyDeleteAmazing!!Apt title.
ReplyDelete