Pages

Sunday, May 20, 2012

நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை


நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை

தமிழ் இலக்கியத்தில் மெல்லியதாக ஓடும் நகைச்சுவை உணர்வு நந்தி கலம்பகத்திலும் காணக் கிடைக்கிறது.

நந்தியின் அரசவையில் பாடும் ஒரு பாடகன் (பாணன் என்று குறிப்பிடுவார்கள்).

அவன் காதலியின் ஊடலைப் போக்க இரவெல்லாம் அவள் வீட்டு வாசலில் நின்று பாடுகிறான்.

அவள் அவனை லந்து பண்ணுகிறாள்.

"ஓ...நீ பாடினியா? எங்க அம்மா அது என்னவோ பேய் தான் அலறுகிறது என்றாள், அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் ஏதோ நரி ஊளையிடுகிறது என்றார்கள், என் தோழியோ நாய்தான் ஏதோ குறைக்கிறது என்றாள், அது எல்லாம் இருக்காது, நீ தான் பாடி இருப்பேன்னு நான் சொன்னேன்..."என்று அவனை கிண்டல் பண்ணுகிறாள்.

அந்த நகைச்சுவை ததும்பும் பாடல்....



ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நா


ஈட்டு = ஈட்டிய

புகழ்நந்தி = புகழ் பெற்ற நந்தியின் அரசவையில் உள்ள

பாண! = பாணனே

நீ = நீ

எங்கையர்தம் = என் அயலில் வந்து

வீட்டிருந்து பாட = வீட்டில் இருந்து பாட

விடிவளவும் = விடியும் வரை

காட்டிலழும் = காட்டில் வாழும்

பேயென்றாள் அன்னை = பேயாய் இருக்கும் என்றாள் என் அன்னை

பிறர் = மற்றவர்கள்

நரியென் றார் = நரி (ஊளை இட்டிருக்கும்) என்றனர்

தோழி = என் தோழி

நாயென்றாள் = நாய் (குறித்திருக்கும்) என்றாள்

நீஎன்றேன் நா = (அது இல்லாம் இருக்காது, இவ்வளவு கர்ண கடூரமாய் பாடியது) நீ என்றேன் நான்.



2 comments:

  1. இனிய பாடல்.

    ReplyDelete
  2. நகைச்சுவை மிக்கதாக உள்ளது...

    ReplyDelete