Pages

Sunday, June 10, 2012

கலிங்கத்துப் பரணி - நிலவின் ஒளியை துகில் என்று...


கலிங்கத்துப் பரணி - நிலவின் ஒளியை துகில் என்று...

காதலனோடு கலந்து மகிழ்ந்து இருந்தாள்.

அந்த மயக்கத்தில் நிலவின் ஒளியை உடை என்று எடுத்து அணிந்து கொண்டு போனவளே...கதவை திற 

கலவி களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்
நீள்பொன் கபாடம் திறமினோ!


கலவி = காதலனோடு ஒன்றாய் இருந்த
களியின் = விளையாட்டின்
மயக்கத்தால் = மயக்கத்தில்
கலை போய் = உடுத்தியிருந்த ஆடைகள் போய்
அகலக் = அகல
கலைமதியின் = அழகிய நிலவின்
நிலவைத் = ஒளியை
துகில் என்று = உடை என்று
எடுத்து உடுப்பீர் = எடுத்து உடுத்திக் கொள்வீர்
நீள்பொன் = நீண்ட பொன்னாலான
கபாடம் = கதவை
திறமினோ! = திறங்களேன்....


2 comments:

  1. அப்படி ஒரு மயக்கமா?! சரிதான்.

    ReplyDelete
  2. ஆடை இதுவென நிலவினை எடுத்து
    ஆனந்த மயக்கம்
    This lyric is from the movie " Engall Thanga Raja (Sivaji) "iravukkum pahalukkum ini enna velai" by Kannadasan!

    ReplyDelete