ஆசாரக் கோவை - சாப்பிடும் முறை
உணவு பற்றி ஆசாரக் கோவை நிறையவே சொல்கிறது. அதில் முதல் பாடல்
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே-என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.
விருந்தினர், வயதில் மூத்தவர்கள் (அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி), வீட்டில் பசு இருந்தால் அது, வீட்டில் கிளி , புறா போன்ற பறவைகளை வளர்த்தால் அது, சின்ன பிள்ளகைள் - இவர்களுக்கு முதலில் உணவு அளித்த பின் தான் நாம் உணவு உண்ண வேண்டும்.
பசு, பறவை எல்லாம் இப்ப இருக்காது. அதை விடுத்து மற்றவர்களை கவனிக்கலாமே...
No comments:
Post a Comment