பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை
பட்டினத்தார், இருந்த செல்வத்தையெல்லாம் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு உண்மையையை தேடி திரிந்தார்.
அவர் கண்ட உண்மைதான் என்ன?
எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அவரை மிகவும் பாத்திருக்கிறது.
நிரந்தரமான ஏதோ ஒன்றை தேடி அவர் அலைந்திருக்கிறார்.
செல்வம், பெண்கள், பிள்ளைகள், உறவுகள் ஏன் நமது உடம்பே கூட நிரந்திரம் அல்ல என்று அறிந்த அவர் சாஸ்வதமான ஒன்றை தேடி அலைந்திருக்கிறார்.
கிடைத்ததா இல்லையா என்று அவருக்குத்தான் தெரியும்.
[
அவருடைய பாடல்கள் எளிமையானா பாடல்கள்.
நிலையாமையை பற்றி அவர் போல் யாரும் அவ்வளவு ஆழமாக சொல்லி இருகிறார்களா என்று தெரியவில்லை.
முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே.
எளிமயான பாடல் தான் என்றாலும், பதம் பிரித்தால் இன்னும் நன்றாக புரியும்:
முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
பிடி சார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால் பொன் அம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே
முடி = மணி முடி, கிரீடம்
சார்ந்த மன்னரும் = அணிந்த, அதை சார்ந்த மன்னரும்
மற்றும் உள்ளோரும் = மற்ற எல்லாரும்
முடிவில் ஒரு = கடைசியில்
பிடி சாம்பலாய் = ஒரு பிடி சாம்பலாய்
வெந்து = தீயில் வெந்து
மண்ணாவதும் = அல்லது மண்ணில் புதை உண்டு போவதும்
கண்டு = பார்த்த
பின்னும் = பின்னும்
இந்த பிடி சார்ந்த = இந்த உறவுகள் என்னும் பிடி சார்ந்த
வாழ்வை நினைப்பது அல்லால் = வாழ்கையை நினைப்பது அல்லால்
பொன் அம்பலவர் = பொன்னால் செய்யப்பட்ட நடன சபையில் ஆடுபவர் (சிவன்)
அடி சார்ந்து = திருவடி பற்றி
நாம் உய்ய வேண்டும் = நாம் பிழைக்க வேண்டும்
என்றே அறிவார் இல்லையே = என்று அறிபவர் இல்லையே
Indha padalgal ellam padikum peru koduthamaiku nanri,nanri.
ReplyDeleteRevathi.
g+1
Delete