சரஸ்வதி அந்தாதி - துயரம் வராது
துயரம் நம் மனத்தில் இருக்க இடம் வேண்டும் அல்லவா ?
மனம் எல்லாம் அந்த கலைவாணியை நிறைத்து வைத்து விட்டால், துயர் எங்கிருந்து வரும்?
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தி உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.
ஆய கலைகள் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட கலைகள்
அறுபத்து நான்கினையும் = அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் = விரித்து உணரச் செய்யும்
என் அம்மை = என் தாய்
தூய = தூய்மையான
உருப்பளிங்கு = உருண்டையான பளிங்கு கல் போல்
போல்வாள் = இருப்பாள்
என் உள்ளத்தி உள்ளே = என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர். = இருப்பள் + இங்கு + வாராது + இடர் = அவள் என் மனத்துள்ளே இருக்கும் போது, ஒரு துன்பமும் எனக்கு வராது
சரஸ்வதி அந்தாதி இரண்டு பாடல்கள்தான் எழுதினீர்களா? அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்களேன்...
ReplyDelete