Pages

Thursday, June 21, 2012

ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது


ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது

சில சமயம் வயது வந்த ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் தனியே வீட்டில் விட்டுவிட்டு போக பெற்றோர்களுக்குத் தயக்கமாய் இருக்கும்.

சின்ன பசங்க, ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று ஒரு சின்ன அச்சம் இருக்கும்.

ஆசாரக் கோவை ஒரு படி மேலே போகிறது.


ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள் ஆயினும்,
சான்றார் தமித்தா உறையற்க-ஐம் புலனும்
தாங்கற்கு அரிது ஆகலான்!

ஈன்றாள் = பெற்ற தாய்

மகள் = மகள்

தன் உடன்பிறந்தாள் ஆயினும், = தன் கூட பிறந்தவள் (தங்கை , அக்கா)

சான்றார் = சான்றோர்

தமித்தா உறையற்க = தனித்து இருக்க மாட்டார்கள்

ஐம் புலனும் = ஐந்து புலன்களும்

தாங்கற்கு = கட்டுப் படுத்துவதற்கு

அரிது ஆகலான்! = கடினமாய் இருப்பதால்


எப்படி யோசித்து இருக்கிறார்கள் அந்த காலத்தில்?

இப்படி இருக்கும் போது, மற்ற பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

ஒரு முறை எல்லா பாடலையும் பார்த்து விடுவோமா ?

என்ன சொல்கிறீர்கள்?


1 comment:

  1. Sure. eagerly waiting. கரும்பு தின்ன கூலியா?

    ReplyDelete