Pages

Sunday, July 1, 2012

நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளன் ஆண்ட நகரை சிறப்பித்து கூற வருகிறார் புகழேந்தி.

பொதுவாக கவிஞர்கள் அது நன்றாக இருந்தது, இது நன்றாக இருந்தது என்று வர்ணித்து கூறுவார்கள்.

புகழேந்தி சற்று வித்தியாசமாய் சிந்திக்கிறார்.

இந்த நாட்டில் சில விஷயங்கள் கொஞ்சம் கோணலாய் இருக்கின்றன, சில சோர்ந்து போய் இருக்கின்றன, சில வாய் விட்டு அரட்டுகின்றன, சில கலங்குகின்றன, சில நேர் வழி விட்டு செல்கின்றன என்று சொல்கிறார்.
படிக்கும் நமக்கு, "அட, அப்படி என்ன இருக்கு...அதில் என்ன சிறப்பு" என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா ?


வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்கம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

வெஞ்சிலையே கோடுவன = இந்த நாட்டில் வளைந்து இருப்பது வில் மட்டும்தான்

மென்குழலே சோருவன = சோர்ந்து விழுவது பெண்களின் மென்மையான தலை முடி மட்டும்தான்

அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன = பெண்கள் காலில் அணியும் கொலுசில் உள்ள மணிகள் மட்டுமே அரற்றுகின்றன

கஞ்கம் கலங்குவன = கலங்கி செல்வன இந்த ஊரில் நீரோடைகள் மட்டுமே

மாளிகைமேல் = மாளிகையில்

காரிகையார் கண்ணே = பெண்களின் கண்ணே

விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.= நேர் வழியையை விட்டு விலகி போவன அந்த கண்களே


1 comment:

  1. எதிர்மறையில் ஒரு நயம்--உங்கள் தலைப்பு பாடலைப்போலவே மிகவும் அருமை.

    ReplyDelete