Pages

Thursday, July 12, 2012

தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?


தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?


தேவராத்திலும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் பிற மத மற்றும் சமய  துவேஷம் இல்லாமல் இல்லை. 

சைவ வைணவ சண்டை ஊர் அறிந்தது.

தேவாரம் பாடப்பட்ட காலத்தில் சைவ சமண உரசல்கள் உச்சத்தில் இருந்தது.

அரசனின் ஆதரவோடு ஒரு சமயத் தலைவர்கள் மற்ற சமயத் தலைவர்களை கண்டித்ததும் தண்டித்ததும் உண்டு.

இங்கு, சைவ சமயத்தை சேர்ந்த ஞான சம்பந்தர் சமண மதத்தவர்களை வென்ற பின், அம்மத பெண்களை கற்பழிக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.....

என்ன...தூக்கி வாரி போடுகிறதா ? பால ஞானியான ஞான சம்பந்தர் பெண்களை கற்பழிக்க நினைப்பாரா ? அதற்க்கு இறைவனின்  அருளை நாடுவாரா ?

குழப்பமாய் இருக்கிறதா ?

கற்பு என்பதற்கு "கல்வி" என்று ஒரு பொருளும் உண்டு. அவர்களின் தவறான கல்வி அறிவை, அறியாமையை அழிக்க இறைவன் அருளை நாடினார் என்று பொருள் கொள்வாரும் உண்டு.

ஞான சம்பந்தர் போன்ற அருளாளர்கள் மக்களின் அறியாமையை போக்கி, அவர்களை நல்வழி படுத்தும் அருள் கொண்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். 

படித்துப் பாருங்கள்.

பாடல்: 
மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.    

சீர் பிரித்த பின்: 

மண் அகத்திலும் வானிலும் எங்குமாம்
திண் அகத்து திரு ஆலவாய் அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண் 
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே

பொருள்:

மண் அகத்திலும் = மண்ணிலும், இந்த பூமியிலும்

வானிலும் = தேவர் உலகிலும்,

எங்குமாம் = வேறு எல்லா இடத்திலும்

திண் அகத்து = திண்மையான மதில்களை கொண்ட

திரு ஆலவாய் = மதுரை (திரு + வால் + வாய்)

அருள் = அருள் செய்ய வேண்டும்

பெண் அகத்து எழில் = பெண்களிடம் உள்ள எழில்

சாக்கியப் பேய் அமண் = சாக்கியரோடு கூடிய பேய் போன்ற சமண சமயத்தை சேர்ந்த

தெண்ணர் = திண்ணர், திண்மையான உடல் உள்ளவர்கள், குண்டர்கள், 

கற்பழிக்கத் திரு உள்ளமே = கற்பை அழிக்க திருவுள்ளம் அருள வேண்டும். அறியாமையை அழிக்க திரு உள்ளம் அருள வேண்டும் என்று பெரியவர்கள் உரை கூறுகிறார்கள்.



9 comments:

  1. பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண்
    தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே

    கற்பு என்பதற்கு கல்வி என்று இங்குப் பொருள் எடுத்துக் கொண்டால், சமண, சாக்கிய மக்களிடம் உள்ள கற்பை அழிக்க உதவ வேண்டும் என்று பாடியிருக்கவேண்டும். அதைவிட்டு, சமண, சாக்கிய பெண்களை (மட்டும்) கற்பழிக்கவேண்டும் என்று கூறுவதென்ன?
    ;)

    ReplyDelete
    Replies
    1. "மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
      திண்ண கத்திரு வாலவா யாயருள்
      பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
      தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே. "

      என்னும் பாட்டில் கடைசி இரு வரிகளே நீங்கள் குறிப்பன.
      "பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண்
      தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே"

      இது பழிப்பாக சாக்கிய அமணர்களை நோக்கிக் கூறிய கூற்று. பிற இடங்களில் குண்டர்கள் என்றும் கூறியுள்ளனர்.
      தின்று கொழுத்தவர்கள், உடல் பருமனானவர்கள் என்று பொருள்.
      பெண்ணகத்து எழில் என்பது இங்கே பெண் மார்பகங்கள் போல சதை கொழுத்த குண்டர்கள் (சாக்கிய அமணர்.)- 'எழில்' என்பது கிண்டல்.

      இப்பழிப்பைத் தவறு என்று சொல்லலாம், ஆனால் "பெண்களைக் கற்பழிக்கச்சொன்னார்" அந்த 3-5 அகவை நிரம்பிய திருஞானசம்பந்தர் என்பது அறவே பொருந்தாதது.
      தெண்ணர் (வலுவானவர், திண்மையுடையவர்) அவர்களின் கற்பைத்தான் (அவரகளின் மதக் கல்வியின் உறுத்திப்பாட்டைத்தான்) அழிக்க வேண்டுகின்றார். ("தெண்ணர் கற்பழிக்க").
      மேலும் கடவுளிடம் போய் மாற்று மதப்பெண்களின் கற்பை அழிக்க வேண்டுவார்களா? அந்த அளவு கீழ்த்தரமானது சிவனியம் என்று நம்புகின்றீர்களா? வியக்கின்றேன்.

      Delete
  2. திரு ஞான சம்பந்தருக்கு மதம் தான் பிடித்திருக்கிறது போலும்! இறைவனை விட!!

    ReplyDelete
  3. ஆனால், திருஞான சம்பந்தன் பாடல் வேறுவிதமாக சொல்கிறது ?

    பாடல் எண் : 3

    மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
    திண்ண கத்திரு வாலவா யாயருள்
    பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
    தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.

    பொழிப்புரை :

    இப் பூவுலகத்திலும் , விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே ! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வாயாக .

    குறிப்புரை :

    எங்கும் ஆம் - எங்குமாய் நிறைந்து , திருவால வாயினில் வெளிப்பட்டருளிய பெருமானே என்பது முதலிரண்டடியின் கருத்து . அருள் - சொல்லி யருள்வீராக . எழில் இகழ்ச்சிக் குறிப்பு . திண்ணகத் திருவாலவாய் - பகைவரால் அழிக்கமுடியாத வலிய அரண்களையுடைய திருவாலவாய் . தெண்ணர் - திண்ணர் என்பதன் மரூஉ . குண்டர் முதலிய பிற பெயர்களைப்போல்வது இது , சாக்கியப் பேய் அமண் - சாக்கியரோடு கூடிய பேய்போன்ற சமணர் . கற்பு - கல்விநிலை ; அல்லது கல்போன்ற உறுதிப்பாடு . பெண்ணகத்துக்குச் சாக்கியர் கற்பு என்ற சொல் அமைப்பை நோக்குக . நாங்கள் பகைகளை ஒழிக்க எண்ணுவதுபோல அவர்களும் எண்ணலாமோ எனின் , தானவிசேடத்தால் சைவத்துக்கு வாழ்வும் புறச் சமயத்துக்கு வீழ்வும் அளிக்கவல்ல தலம் என்பார் ; ` திண்ணகத் திருவாலவாய் ` என்றார் . இடவிசேடம் இத்துணைத்து என்பதை ` முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய , புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்து ` எனவரும் சிலப்பதிகாரத்தால் அறிக .

    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3047

    ReplyDelete
  4. What's the coolest thing you've done with Python?
    f you want to more details to contact us: #LoginForExcellence, #PythonTraininginChennai,#PythonTrainingInstituteinChennai,#PythonTraininginVelachery,#TraininginVelachery,

    ReplyDelete
  5. கற்பு என்பது கல்வி என்று பொருள் கொள்ள வேண்டுமென்பதாயின் அது ஏன் பெண்களை பற்றி மட்டும் நீள்கிறது?

    ReplyDelete
  6. தவறான விளக்கம்..

    திருஞானசம்பந்தன் ஒரு பார்ப்பன கொலைகார அயோக்கியன்..
    அவன் தான் மதுரையில் 8000 சமணர்களை கழுவேற்றி படுகொலை செய்தான்.

    ReplyDelete
  7. தவறான கருத்து. திருஞானசம்பந்தர் சமணர் பெண்களின் கற்பழிக்க சக்தி வேண்டும் என்றே சிவனிடம் வேண்டுகிறார்.

    ReplyDelete
  8. நல்ல உருட்டு

    ReplyDelete