Pages

Wednesday, July 11, 2012

மூவருலா - என்னையே நான் அறியேன்


மூவருலா - என்னையே நான் அறியேன்

காதலித்துப் பாருங்கள். மேலும் அழகாக ஆவீர்கள்.

கன்னம் மெருகேறும்.

கண்ணில் ஒளி தோன்றும். உதட்டோரம் ஓயாத புன்னகை மலரும்.

கலையும் முடிகள் காற்றோடு கதை பேசும்.

வானம் தேன் சிந்தும். தென்றல் கவரி வீசும்.

உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியாமல் போகும்.

நானே நானா? யாரோ தானா என்று மெட்டு உதட்டோரம் மொட்டுவிடும்

மூவருலா என்ற இலக்கியத்தில், இங்கே ஒரு பெண், தன்னை தானே பார்த்து வியக்கிறாள்.


"ஐயோ, நான் எப்படி மாறிவிட்டேன்...எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லையே, என் காதலன் எப்படி என்னை அடையாளம் கண்டுகொள்வான்" என்று கவலைப் படுகிறாள்

காதலித்ததால் என்னவெல்லாம் கவலை...!

பாடல்





மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
அடையுந் தனதுருக்கண் டஞ்சிக் - கொடையனகண்
பண்டறியும் முன்னைப் பருவத் துருவத்துக்
கண்டறியும் அவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும்
முன்னை வடிவும் இழந்தேன் முகநோக்கி
என்னை அறிகலன்யான் என்செய்கேன் - தன்னை
வணங்கி வருவ தறிவன் எனவந்
திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும்

சீர் பிரித்த பின்

மிடையும் புது வனப்பு விண்ணோரும் வீழ
அடையும் தனது உரு கண்டு அஞ்சி - கொடையன கண்
பண்டு அறியும் முன்னைப் பருவத்து உருவத்து
கண்டு அறியும் அவ் வடிவு காண்கிலேன் - பண்டு அறியும்
முன்னை வடிவும் இழந்தேன் முகம் நோக்கி
என்னை அறிகலன் யான் என் செய்கேன் - தன்னை 
வணங்கி வருவது அறிவன் என வந்து
இணங்கு மகளிரிடை நின்ற அணங்கும்

பொருள்

1 comment:

  1. என்னை அறிகலன் யான் என் செய்கேன் - புரிந்துகொள்ள இப்படிப்பட்ட விளக்கமும் வேண்டியது தான்

    ReplyDelete