Pages

Tuesday, July 10, 2012

திரிகடுகம் - சொத்து அழியும் வழிகள்


திரிகடுகம் - சொத்து அழியும் வழிகள்


ஒருவனுடைய செல்வம் ஏன் அழிகிறது ?

தன்னை தானே புகழ்ந்து தற்பெருமை பேசுதல், எதற்க்கெடுத்தாலும் கோபப்படுதல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஆசைப் படுதல் இந்த மூன்றும் ஒருவனின் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.

பாடல்


தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும்-முன்னிய
பல் பொருள் வெஃகும் சிறுமையும், இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை

பொருள்:

தன்னை வியந்து = தன்னை தானே வியந்து, ஆஹா, நாம் எப்பேர்பட்ட ஆள் என்று வியந்து

தருக்கலும், = தருக்கம் என்றால் உரத்து சொல்லுதல், வாதிடுதல் என்று 
பொருள். 'எதுக்கெடுத்தாலும் தருக்கம் பண்ணாதே' என்று சொல்ல கேட்டு இருக்கிறோம் அல்லவா ?

தாழ்வின்றிக்  = காரணம் இல்லாமல்

கொன்னே = பயனிலாத, அச்சப்ப்படும்படி

வெகுளி பெருக்கலும்  = கோபத்தை கொள்ளுதலும்

முன்னிய = கண்ணால் கண்ட

பல் பொருள் = பல பொருள்களை

வெஃகும் சிறுமையும், = ஆசைப்படும் சிறுமையும்

இம் மூன்றும் = இந்த மூன்றும்

செல்வம் உடைக்கும் படை = ஒருவனுடைய செல்வத்தை உடைக்கும் படைகள்



2 comments:

  1. ஆனால் இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளை பார்த்தால் இந்த மூன்றும் செய்தால் செல்வம் சேரும் போல் தெரிகிறதே.

    ReplyDelete
  2. Idhi enaku vijay sedhupathi solli dha theriyum 😎😎

    ReplyDelete