திருவாசகம் - ஒண்ணுக்குள் ஒண்ணு
சிவனுக்குள் சக்தி
சக்திக்குள் சிவம்.
சிவனும் சக்தியும் அடியாரின் மனதுக்குள்
அடியார் தொண்டர் கூட்டத்திற்குள்....
ஒண்ணுக்குள் ஒன்றாய் செல்லும் சைவ சித்தாந்த நெறியை மணி வாசகப் பெருந்தகை விளக்குகிறார்....
உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்அரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.
உடையாள் = உமையவள்
உன்றன் நடுவிருக்கும் = உனக்குள் இருக்க
உடையாள் நடுவுள் = உமையவளின் உள்
நீயிருத்தி = நீ இருக்க
அடியேன் நடுவுள் = என் மனத்தினுள்
இருவீரும் = நீங்கள் இருவரும்
இருப்ப தானால் = இருப்பதனால்
அடியேன் = அடியேன்
உன் அடியார் = உன் அடியார்கள்
நடுவுள் இருக்கும் = மத்தியில் இருக்கும்
அருளைப் புரி யாய் = அருளைத் தருவாய்
பொன்னம்பலத் = பொன்னாலாகிய அம்பலத்தில் (ஆடும்)
தெம் = எம்முடைய
முடியா முதலே = என்றும் முடியாத முதல்வனே
என்கருத்து முடியும் = என் எண்ணம் நிறைவேறும்
வண்ணம் = வண்ணம்
முன்னின்றே. = முன் வந்தே
No comments:
Post a Comment