கம்ப இராமாயணம் - காமம் ஏன் சுடுகிறது ?
சுடுவதற்கு நெருப்பு வேண்டும்.
நெருப்பு வேண்டும் என்றால், விறகு போன்ற எரிபொருள் வேண்டும்.
காமத்தில் ஏது எரிபொருள் ?
கம்பன் சொல்கிறான் எது எரிபொருள் என்று....காமன் வீசும் அம்புகள் விறகாக காமத் தீ கொளுந்து விட்டு எரிகிறதாம்.
இராமனை உப்பரிகையில் இருந்து பார்த்த பின், சீதை விரக தாபத்தில் வேகிறாள்.
நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
ஊமரின். மனத்திடை உன்னி. விம்முவாள்;
காமனும். ஒரு சரம் கருத்தின் எய்தனன்-
வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே.
நோம்; = நோவாள்
உறும் நோய் = தான் உறுகின்ற நோய்
நிலை = நிலையையை
நுவலகிற்றிலள் = சொல்ல முடியாமல் தவித்தாள் (நுவலுதல் = சொல்லுதல்)
ஊமரின். மனத்திடை = ஊமையையை போல மனதிற்குள்ளேயே
உன்னி. விம்முவாள்; = எண்ணி விம்முவாள்
காமனும். = மன்மதனும்
ஒரு சரம் = ஒரு அம்பை
கருத்தின் எய்தனன்- = சரியாக எய்தான்
வேம் எரிஅதனிடை = வேகும் நெருப்பில்
விறகு இட்டென்னவே. = விறகை இட்டது போல
இப்போ தெரிகிறதா, ஏன் காமம் சுடுகிறது என்று ....
No comments:
Post a Comment