Pages

Sunday, July 8, 2012

திருக்குறள் - நகைச்சுவை உணர்வு


திருக்குறள் - நகைச்சுவை உணர்வு


திருவள்ளுவர் ஏதோ ரொம்ப சீரியசானவர்  என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியல்ல.
அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருக்கிறார். அது மட்டும் அல்ல, நம்மையும் சிரித்து வாழ சொல்கிறார்.

நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு இந்த உலகம் பகலே இல்லாத நீண்ட இரவாய் இருக்கும் என்கிறார்.

நகைச்சுவை என்றால் எப்ப பார்த்தாலும் பல்லை காட்டிக் கொண்டு இருப்பது அல்ல. எப்ப சிரிக்க வேண்டும், எதற்கு சிரிக்க வேண்டும், எவ்வளவு சிரிக்க வேண்டும் என்று ஒரு கணக்கு வேண்டும்.

சிரிப்பிலும் ஒரு வல்லமை வேண்டும்.


நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன் றிருள்.


கொஞ்சம் சீர் பிரிப்போம்:

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் இருள்

நகல் வல்லர் = சிரிப்பதில் வல்லவர்கள்.

அல்லார்க்கு = இல்லாதவர்களுக்கு

மா இரு ஞாலம் = இந்த பெரிய உலகம்

பகலும்பாற் பட்டன் இருள் = பகலும் இரவு போல் ஒரே இருட்டாய் இருக்கும்

நாம் எப்போது சிரிப்போம் ? 

தனக்கு தானே சிரிப்பது அவ்வளவு நன்றாக இருக்காது. அதற்க்கு வேறு பெயர் உண்டு. 

சிரித்து மகிழ துணை வேண்டும். நண்பரோ, மனைவியோ, 
கணவனோ...இன்னொரு ஆள் வேண்டும்.

எனவே, நகல் வல்லவர்கள் நிறைய நண்பர்களோடும் உறவினர்களோடும் இருப்பார்கள்.

நகல் வல்லவர்களாய், நண்பர்களோடும், உறவினர்களோடும், சிரித்து சந்தோஷமாய் இருங்கள்...




No comments:

Post a Comment