Pages

Friday, July 6, 2012

நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


சில விஷயங்கள் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பதே மேல் என்று குமர குருபரர் நீதி நெறி விளக்கத்தில் கூறுகிறார்.


அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று

கருத்துரை: சபையை கண்டு நடுங்கும் படித்தவனின் கல்வியும். அவையையை கண்டு அஞ்சாத முட்டாள்களின் தைரியமும், ஈகை குணம் இல்லாதவனின் செல்வமும்,, நல்ல மனம் கொண்டவர்களின் ஏழ்மையும், இருப்பதை விட இல்லாமையே நன்று. 


அவையஞ்சி = அவைக்கு அஞ்சி, சபைக்கு பயந்து

மெய்விதிர்ப்பார் = உடல் நடுங்குவார்

கல்வியுங் = கல்வியும்

கல்லார் = கல்லாத மூடர்களின்

அவையஞ்சா = அவை (சபை) அஞ்சாமல் பேசும்

வாகுலச் சொல்லும் = அர்த்தமற்ற பேச்சும்

நவையஞ்சி = செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விட்ட குற்றத்திற்கு 
அஞ்சி

ஈத்துண்ணார் செல்வமு = பிறருக்கு கொடுத்து வாழாதவர்களின் செல்வமும்

நல்கூர்ந்தா ரின்னலமும் = பிறர் நலம் நாடுவோரின் ஏழ்மையும்

பூத்தலிற் பூவாமை நன்று = இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது




4 comments:

  1. அருமையான பா. ஆனால், நல்கூர்ந்தார் இன்னலம் என்பதன் பொருள், எனக்குப் புரிந்தவரையில், ஏழ்மையடைந்தவர்களது தகுதிக்குமீறிய பகட்டு/ஆடம்பரம்.

    ReplyDelete
  2. சகோதரரே, இங்கு பிறர் நலம் நாடுவது ஒரு சிறந்த பண்பாக கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களிடம் ஏழ்மை இல்லாமலிருந்து மேலும் செல்வம் இருந்தால் அது பிறருக்கு உதவும் என்பதே எனக்கு புரிந்த வரையில். மிகச்சிறந்த பா.

    ReplyDelete
  3. நவையஞ்சி = கொடுத்தால் குறைந்துவிடும் என்ற அச்சம்

    ReplyDelete
  4. இரக்ககுணம் உள்ள சப்ப வர்களுக்கு ஒரு நாள் இறையருள் கிட்டும் அப்போது எல்லாம் கைகூடும் அதுவரைசுமை தாங்கிபோலவாழ்ந்தால்

    ReplyDelete