Pages

Monday, August 13, 2012

திருஅருட்பா - பாடவா, உன் பாடலை


திருஅருட்பா - பாடவா, உன் பாடலை 


எல்லோரும் சொல்கிறார்கள், நான் மிக இனிமையான பாடல்களை பாடுகிறேன் என்று.

அதை கேட்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

நானா பாடினேன் ? 

இறைவா, நீ என்பால் மகிழ்ந்து உன் அருளை என்மேல் சுரந்து, என் மூலம் இனிய பாடல்களையும், உயர்ந்த கருத்துகளையும் வெளி படுத்துகிறாய். 

அதை எல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள்....

என்கிறார் வள்ளாலார்...


தேன் என்ற இன்சொல் தெரிந்து நின்னைப் பாடுகின்றேன்
நான் என்று உரைத்தல் நகை அன்றோ, வான் நின்ற
ஒண்பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன்சொல்லும்
வண்பொருளும் ஈதல் மறந்து


தேன் என்ற இன்சொல் = தேன் போன்ற இனிய சொற்களால்

தெரிந்து = நான் ஏதோ தெரிந்து 

நின்னைப் பாடுகின்றேன் = உன்னைப் பாடுவதாக 

நான் என்று உரைத்தல் = நான், என்று சொன்னால்

நகை அன்றோ, = சிரிப்பதற்கு உரியதன்றோ ?


வான் நின்ற = வானில் இருந்து

ஒண்பொருள் நீ = உயர்ந்த பொருளான நீ

உள்ளம் உவந்து = மனம் மகிழ்ந்து

அருளால் = உன்னுடைய அருளால்

இன்சொல்லும் = இனிய பாடல்களும்

வண்பொருளும் = உயர்ந்த கருத்துகளும்

ஈதல் மறந்து = தருவதை மறந்து



"அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்

"யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் 
தாமே பெற வேலவர் தந்ததினால்"

என்பார் அருணகிரி நாதர் ...


No comments:

Post a Comment