Pages

Friday, August 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


கடவுள் இருக்கிறா அல்லது அது வெறும் ஒரு கற்பனையா என்ற வாதம் இருந்து கொண்டே இருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்றால், அவரை யாரவது பார்த்து இருக்கிறார்களா ? பார்த்தால் என்ன பார்த்தார்கள் ?

பார்த்தவர்கள் கூட, தைர்யமாக 'நான் கடவுளை பார்த்தேன்' என்று சொல்வார்களா ?

பேயாழ்வார் சொல்கிறார்..ஒரு முறை அல்ல ஐந்து முறை...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்*
என்னாழி வண்ணன்பா லின்


திருக்கண்டேன் = மஹா லக்ஷ்மியை கண்டேன்

பொன்மேனி கண்டேன் = பொன் போல் ஜொலிக்கும் மேனியை கண்டேன்

திகழு மருக்கனணிநிறமுங் கண்டேன் = திகழும் + அருக்கன் + நிறமும் + கண்டேன் = சூரியனைப் போல் ஒளி விடும் நிறத்தைப் பார்த்தேன்

செருக்கிளரும் = செரு என்றால் போர், யுத்தம். யுத்தத்திற்கு கிளர்ந்து வரும்

பொன்னாழி கண்டேன் = சக்ராயுதம் கண்டேன்

புரிசங்கங் கைக்கண்டேன் = கையில் சங்கு இருப்பதை கண்டேன்

என்னாழி வண்ணன்பா லின் = கடல் வண்ணமாய் இருக்கும் அவனிடத்தில்

பார்க்காமலா இத்தனை முறை கண்டேன் கண்டேன் என்று சொல்லி இருப்பார் ?




2 comments:

  1. Difficult to dismiss, but difficult to accept.

    ReplyDelete
  2. ஆழ்வார் எதற்கு பார்க்காததை விலாவரியாக கண்டேன் கண்டேன் என அழுத்தமாகவும் அழகாகவும் சொல்ல போகிறார்?படிக்கும் போதே நமக்கு புல்லரிக்கிறது.நேரில் கண்ட அவருக்கு எப்படி இருந்திருக்கும்? .

    ReplyDelete