நள வெண்பா - எரியம் இரவு
அவள் தனித்து இருக்கிறாள். இரவு சுடுகிறது.
ஏன் என்று யோசிக்கிறாள்.
பகல் எல்லாம் இந்த சூரியன் இருக்கிறது. இராத்திரி எங்கே போகிறது ? இந்த இரவு சூரியனை விழுங்கி இருக்குமோ ? அதுனால தான் இப்படி இந்த இரவு கொதிக்கிறதோ?
இல்லைனா, என் மார்பில் இருந்து கிளம்பிய சூடு காரணமாய் இருக்குமோ ?
ஒரு வேளை, இந்த நிலவு குளிர்ச்சிக்கு பதில் வெப்பத்தை தர ஆரம்பித்து விட்டதோ?
ஏன்னே தெரியலையே..இந்த இரவு இப்படி எரிகிறதே....
வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா
வெங்கதிரோன் = வெம்மையான கதிரவன்
தன்னை விழுங்கிப் = தன்னை விழுங்கி
புழுங்கியோ = சூடு ஆனதோ ?
கொங்கை அனலில் = என் மார்பில் இருந்து வரும் சூட்டில்
கொளுந்தியோ = கொளுத்தப்பட்டோ
திங்கள் = நிலவில்
விரிகின்ற வெண்ணிலவால் = இருந்து வரும் வெண்ணிற கதிராலா ?
வேகின்ற தேயோ = வேகின்றதே
எரிகின்ற தென்னோ இரா = எரிகின்றதே இந்த இரவு
No comments:
Post a Comment