Pages

Sunday, October 7, 2012

அபிராமி அந்தாதி - எது தவம்


அபிராமி அந்தாதி - எது தவம்


குழந்தை பிறந்தபின் ஒரு தாயின் மார்புகள் பெரிதாவது இயற்கை. குழந்தைக்கு உணவு தரவேண்டி இயற்கை அப்படி ஒரு மாற்றத்தை பெண்ணின் உடலில் உண்டாக்குகிறது. 

அபிராமி இந்த உலகுக்குத் தாய். அவளுக்குத்தான் எத்தனை குழந்தைகள். எத்தனை யுகங்களாய் உணவளித்து வருகிறாள். அபிராமி பட்டர் அவளின் மார்புகளை பார்க்கிறார். கவர்ச்சி அல்ல, கருணை அவருக்குத் தெரிகிறது. அவளை அவர் தாயகப் பார்க்கிறார். 

சிறிய இடை, பட்டுச் சேலை, பெரிய மார்புகள், அதன் மேல் தவழும் முத்து மணி மாலை, தலையில் பிச்சிபூ, கரு கரு என்று முடி, கண் மூன்று...பார்த்துக்கொண்டே இருக்கலாம்...இதை விட வேறு தவம் என்ன இருக்கிறது ?

பாடல்



சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் 
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த 
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத் 
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.

பொருள்;


சின்னஞ் சிறிய = ரொம்ப சின்ன

மருங்கினில் = இடையில்

சாத்திய = கட்டிய, உடுத்திய

செய்ய பட்டும் = சிறந்த பட்டு ஆடையும் 

பென்னம் பெரிய முலையும் = மிகப் பெரிய மார்புகளும்

முத்தாரமும், = அதன் மேல் தவழும் முத்தால் செய்த ஆரமும்

பிச்சி மொய்த்த = பிச்சி பூ சூடிய 

கன்னங்கரிய குழலும்,= கரிய குழலும் 

கண் மூன்றும், = மூன்று கண்களும்

கருத்தில் வைத்துத் = மனதில் நினைத்து 

தன்னந்தனி இருப்பார்க்கு, = தனந்தனியே இருப்பார்க்கு

இது போலும் தவம் இல்லையே.= இது போன்ற தவம் வேறு எதுவும் இல்லை

http://www.blogger.com/blogger.g?blogID=4597935220111682070#allposts

To read all other Abhiraami Andhaadhi poems in this blog, please click the above link


1 comment:

  1. தன்னந்தனியே இருக்க வேண்டுமாம். அது எனக்கு இனிமையாகப் பட்டது.

    ReplyDelete