இன்னிலை - சிற்றின்பம் மூலம் பேரின்பம்
ஆணும் பெண்ணும் இல்லறத்தில் கூடி காதல் இன்பம் அனுபவிப்பது இறுதியில் பேரின்பம் அடைய ஒரு வழி.
இல்லற இன்பமே இறுதி அல்ல.
கசப்பு மருந்தை நேரடியாக அப்படியே உண்பது கடினம்.
அதன் மேல் சிறிது சர்க்கரை தடவித் தந்தால், உண்பது எளிது, நோயும் குணமாகும்.
மருந்தை கொடுத்தால் அதன் மேல் உள்ள சர்கரையையை மட்டும் ருசித்து விட்டு, மருந்தை தூக்கி எறிந்து விடுவது எவ்வளவு புத்திசாலித்தனமோ அதுபோல் இல்லற இன்பத்தை மட்டும் அனுபவிப்பது.
காதல் இன்பம் வேண்டும். ஆனால் அது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
பாடல்
துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல்-புணைதழீஇக்
கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகு மணி.
பொருள்
துணையென்ப = (வாழ்க்கை) துணை என்பார்
காம விருந்துய்ப்பார் = காம இன்பத்தை விருந்து போல் அனுபவிப்பவர்கள்
தோமில் = குற்றமில்லாத
இணைவிழைச்சின் = புணர்ச்சி இன்பத்தில்
மிக்காகா ராகல் = அளவுக்கு அதிகமாக ஈடுபடாமல் இருந்தால்
புணைதழீஇக் = ஆற்றைக் கடக்க உதவும் புனை (படகு) போல்
கூட்டுங் = உதவும் (அந்த அளவு மிகாத இல்லற இன்பம்)
கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால் = கசப்பு மருந்தை இனிப்பு தடவி உண்பது போல்
வேட்டபோழ் தாகு மணி. = வேட்ட + பொழுது + உண்டாகும் + மணி = திருமணம் செய்து கொண்டபோது உண்டான அழகிய தோற்றம் (அது இனிப்பு போல. நாள் ஆக ஆக அந்த அழகு போய், இளமை போய், நோய் வந்து சேரும்...அது கசப்பு. இளமை இருக்கும்போதே, இல்லற இன்பத்தை அளவோடு நுகர்ந்து முக்திக்கு வழி தேட வேண்டும்)
சொல்றத சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்....
இந்தப் பாட்டு யார் எழுதியது? சும்மா கடமுடா என்று?
ReplyDelete