Pages

Friday, October 5, 2012

திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


டேய், அவ என்ன அவ்வளவு அழகா ? ஏதோ இருக்கா. அதுக்காக இப்படி கிடந்து உருகிற...

போடா, உனக்குத் தெரியாது...அவளோட அழகு...

சரிப்பா, எங்களுக்குத் தெரியாது...நீ தான் சொல்லேன்...

சொல்றேன் கேளு...அவளோட புருவம் இருக்கே, அது நிலவில் இநருந்து இரண்டு கீற்றை வெட்டி எடுத்து வைத்தது மாதிரி இருக்கும். அவ பார்வை இருக்கே, வேல் மாதிரி, அவ்வளவு கூர்மை....

டேய்..உனக்கே இது ரொம்ப ஓவரா படல....

இல்லடா...அவ எங்கேயோ இருக்க வேண்டியவ...அவங்க வீட்டுல அவ அருமை தெரியாம அவளை பள்ளிகூடத்துக்குப் போ, கடைக்குப் போ, வயகாட்டுக்குப் போ என்று அந்த தேவதைய போட்டு வேலை வாங்குறாங்க...பாவம்டா அவ...

ஆனா ஒண்ணுடா, அப்படி அனுப்புனதுலையும் ஒரு நல்லது நடந்துருக்கு...அவளை வயலைப் பாத்துக்க அனுபிச்சாங்க, இப்ப அவ என் மனசப் பாத்துகிரா....


பாடல்:


திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
மனம் காக்கவைத்தார் மருண்டு


பொருள்

திங்களுள் வில் எழுதி = நிலவால் புருவம் எழுதி

தேராது, = அது போதாது என்று

வேல் விலக்கி,= வேலால் விழி எழுதி

தங்கள் உளாள் = தங்களுடைய சாதாரண குடும்பத்தில் பிறந்த காரணத்தால்

என்னும் தாழ்வினால், = அவளையும் தாழ்வாக எண்ணி

இங்கண் = இங்கே

புனம் காக்கவைத்தார்போல் = திணை புனங்களை காக்க வைத்தார்கள்

பூங்குழலைப் போந்து, = ஆனால் அவளோ பூங்குழலில் மலர் சூடி

என் = என்னுடைய

மனம் காக்கவைத்தார் மருண்டு = மனத்தை தன்னுடைய மருண்ட 
கண்ணால் காத்துக் கொண்டு இருக்கிறாள்


2 comments:

  1. நல்ல ஜொள்ளு டயலாக்!

    ReplyDelete
  2. அந்த காலத்து தமிழர்கள் நல்ல ரசனையோடு வாழ்ந்திருக்கிறார்கள்

    ReplyDelete