Pages

Wednesday, November 21, 2012

சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை


சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை 


அவர்கள் இளம் காதலர்கள். 

அவன் வேலை நிமித்தமாய் வெளியூர் போய் விட்டான். வேலை மும்முரத்தில் அவளை கூப்பிட்டு பேச மறந்து விட்டான். அவளுக்கு ஒரே தவிப்பு...பத்திராமாய் போய் சேர்ந்தானா, சாபிட்டானா, தூங்கினானா, அந்த ஊர் தட்ப வெப்பம் எப்படி இருக்கிறதோ என்று ஆயிரம் கவலை அவளுக்கு....ஒரு வேளை என்னை மறந்தே விட்டானோ ? இனிமேல் என்னை பற்றி நினைக்கவே மாட்டானோ ?

போனா போகட்டுமே...எனக்கு என்ன...அவன் என்னை மறந்தாலும் என்னால் அவனை மறக்க முடியாது...என்று அருகில் உள்ள பறவைகளிடம் சொல்லி கவல்கிறாள்.....

சிலப்பதிகாரத்தில் வரும் அந்த காதலும் கவலையும் சேர்ந்த வரிகள்...

பாடல்


தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் 
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க 
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் 
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.


பொருள்

தம்முடைய = தன்னுடைய

தண்ணளியும் = வெண் கொற்றக் குடையும், (அன்பு என்று பொருள் கூறுவாரும் உண்டு )

தாமும்தம் மான்தேரும் = குதிரைகள் பூட்டிய தேரில் சென்ற அவனும்  

எம்மை = என்னை

நினையாது விட்டாரோ = நினைக்காமல் மறந்து விட்டாரோ ?

விட்டுஅகல்க = போட்டும் 

அம்மென் = அந்த மெல்லிய

இணர = நெருங்கிய சிறகுகளை உடைய

அடும்புகாள்  அன்னங்காள் = அடும்புகளே, அன்னங்களே 

நம்மை மறந்தாரை = என்னை மறந்தாரை

நாம்மறக்க மாட்டேமால். = நான் மறக்க மாட்டேன்

மாட்டோமால் என்பதற்கு மறக்க முடியாது (விரும்பினாலும்) என்றும் பொருள் சொல்லலாம்.

பாடலை எழுதியது இளங்கோ அடிகள் என்ற துறவி. 

பொருள் சொன்னது ...இன்னொரு துறவி...:)

3 comments:

  1. What a beautiful poem!In silappathikaaram whose words are these? kannagi, madhavi?

    ReplyDelete
  2. இதன் கடைசி வரி மிகப் பிரபலமானது. ஆனால் முழுப் பாடலையும் படித்ததில்லை. நன்றி.

    ஆமாம், உன்னையா துறவி என்று சொல்லிக் கொள்கிறாய்?!?

    ReplyDelete