ஆத்திசூடி - ஆறுவது சினம்
ஆத்திசூடி நாம் ஒன்றாம் வகுப்பிலோ இரண்டாம் வகுப்பிலோ படித்தது.
ஔவையார் எழுதியது. பெண் என்பதாலோ என்னவோ, அவள் எழுதிய பாடல்களுக்கு பெரிய சிறப்பு கிடைக்கவில்லை.
திருவள்ளுவர் ஏழு வார்த்தைகளில் எழுதியதை இவள் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் எழுதி விடுகிறாள். ஏழு வார்த்தைகளை பார்த்தே நாம் பிரமித்து போய் இருக்கிறோம். இரண்டு வார்த்தைகளை என்னவென்று சொல்லுவது ?
ஆத்திசூடியில் இருந்து சில விஷயங்களைப் பார்ப்போம்.
ஆறுவது சினம்.
சினம் என்றால் அது ஆறுவது. மணிக் கணக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில் இருக்காது. ஆறிவிடும். ஆறுவது தான் சினம்.
சில உணர்ச்சிகள் ஆறாது. பொறாமை, துவேஷம், காதல், காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும்.
சரி. ஆறுவது சினம் ... அதனால் என்ன ?
பாலோ காபியோ சூடாக இருந்தால் என்ன செய்வோம் ? அதை இன்னொரு கிளாசிலோ பாத்திரத்திலோ மாற்றி மாற்றி ஊத்துவோம். அதை ஆத்துவோம் அல்லவா ? அது போல், சினம் வந்தால் இடத்தை மாற்றினால் போதும். சினம் மாறி விடும்.
யார் மீதாவது கோவம் வந்தால், முதலில் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுங்கள். கோவம் ஆறும்.
இரண்டாவது, பால் பாத்திரம் சூடாக இருந்தால், அதை குளிர்ந்த நீரில் உள்ள பாத்திரத்தில் வைத்தால் அதன் சூடு குறைந்து விடும். அது போல், கோவம் வரும் போது இடத்தை மாற்றி அமைதியான சூழ்நிலைக்கு சென்று விட்டால், கோவம் ஆறி விடும்.
கோபமாய் இருக்கும் போது பேசாதீர்கள், சண்டை போடாதீர்கள். அமைதியாய் இருங்கள்...ஏனென்றால் ...ஆறுவது சினம்....
Wonderful. 2 வரிகளுக்குள் இவ்வளவு அர்த்தமா? திருக்குறல் தான் பெஸ்ட் என்று நினைத்திருந்தேன். ஆத்திசூடி அதை தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கே?
ReplyDeleteஇதெல்லாம் ஏன் கோனார் உரையில் இந்த மாதிரி இல்லை. நான் படிக்கிற காலத்தில் இது மாதிரி யாராவது விளக்கி சொல்லி கொடுத்திருந்தால் எவளவு ரசித்து படித்திருப்பேன். சரி பாக்கி ஆத்திசூடி எப்ப வறும். ஆவலோட எதிர்பார்க்கிறோம்
வறும்? தவறு …. வரும் …
Delete"ஆறுவது சினம்" என்றால், "சினத்தை ஆற்ற வேண்டும்" என்று பொருள் என்று நினைத்தேன். "சினம் ஆறிவிடும்" என்ற அர்த்தமும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஆறாத சினமே இல்லையோ?!
cumin soon
Deleteha ha
Deleteஆறாத சினம் என்பது வஞ்சமாக மாறிவிடும. வஞ்சம் என்பது பழி வாஙகும் உணர்ச்சி ஆகம்.
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteஅர்த்தமுள்ள எவரும் புரிந்து கொண்டு அமைதியுடன் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள உதவும் ஆற்றுப்படுத்தும் பதிவு வாழ்த்துக்கள்
ReplyDelete