Pages

Wednesday, November 28, 2012

இராமாயணம் - இராமன் வாங்கிய வசவுகள்


இராமாயணம் - இராமன் வாங்கிய வசவுகள்


இராம காதையில், இராமன் பல இடங்களில் வசை பாடப் படுகிறான். முதலில் ஆரம்பித்தவள் கூனி. 

இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தியை கைகேயி சொன்னவுடன் கூனி கூறுகிறாள் 

ஆடவர்கள் நகைக்க, ஆண்மை மாசு அடைய, தாடகை என்ற பெண்ணை கொன்ற, குற்றம் உள்ள வில்லை கொண்ட இராமனுக்கா மணி முடி சூட்டப் போகிறார்கள் நாளை, இதுவும் ஒரு வாழ்வா என்று அமில வாரத்தைகளை வீசுகிறாள். 

பாடல் 

ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற,
தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,
கோடிய வரி சிலை இராமன் கோமுடி,
சூடுவன் நாளை; வாழ்வு இது' எனச் சொல்லினாள்.

பொருள் 

ஆடவர் நகையுற = ஆண்கள் எல்லாம் நகைக்கும் படி

ஆண்மை மாசு உற = ஆண்மை மாசு படிய

தாடகை எனும் பெயர்த் தையலாள் பட, = தாடகை என்ற பெயர் கொண்ட பெண்ணை கொன்ற

கோடிய = வளைந்த, குற்றமுள்ள 

வரி சிலை = வில்லைக் கொண்ட

இராமன் கோமுடி = இராமனுக்குகோ முடி அல்லது, இராமனுக்கு அரச முடி,

சூடுவன் நாளை; = சூட்டப் போகிறார்களோ நாளை

வாழ்வு இது' = என்ன வாழ்வு இது 
 
எனச் சொல்லினாள்.= என்று சொல்லினாள்

எவ்வளவு கூரான வார்த்தைகள். 

இதை கேட்டதும் கைகேயி அவள் கழுத்தில் கிடந்த முத்து மாலையையை எடுத்து கூனியின் கழுத்தில் போட்டாள் ?

சற்று முரணாக இருக்கிறது அல்லவா ? கைகேகிக்கு இராமனை அவ்வளவு பிடிக்கும். என் மகன் என்றே சொல்லித் திரிவாள். அவள் மனம் இன்னும் மாற்றப் படவில்லை, கூனியால்.

இருந்தும், இந்த சொற்களை கேட்ட பின்னும், கூனியை கோவிக்காமல், பரிசளிக்கிறாள்....

ஏன் தெரியுமா ? அங்கு தான் கம்பனின் கவித்திறம் கொடி கட்டி பறக்கிறது....


2 comments: