Pages

Friday, November 9, 2012

முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


யார் சொல்லி கேட்கிறது இந்த மாலை வேளை. வந்து பாடாய் படுத்துகிறது. வந்தால் சட்டென்று போகவும் மாட்டேன் என்கிறது. மாலை மட்டும் வந்தால் பரவாயில்லை, அதோடு கூட இந்த ஆயர்கள் வாசிக்கும் புல்லாங்குழல் ஒலியும் சேர்ந்து அல்லவா வருகிறது. 

இளவளவன் என்ற இந்த நாட்டு இராஜா இருந்து என்ன பிரயோஜனம். இந்த மாலை பொழுது வரக்கூடாது என்று ஒரு கட்டளை போட்டா என்னவாம். அப்படி ஒரு கட்டளை போட்டு , மாலை பொழுது வராமால் தடுத்து என் உயிரை காப்பாற்ற முடியலை, இவன் தான் இந்த உலகை எல்லாம் காப்பாற்றப் போறானாக்கும்...ஹும்.....

பாடல் 


தெண்ணீர் நறுமலர்த்தார்ச்
சென்னி இளவளவன்
மண்ணகம் காவலனே
என்பரால் - மண்ணகம்
காவலனே ஆனக்கால்
காவானே - மாலைக்கண்
கோவலர்வாய் வைத்த குழல்

பொருள்

தெண்ணீர் = தெளிந்த நீரில்

நறுமலர்த் = (பூத்த) வாச மலர்களை

தார்ச் = (கொண்டு கட்டப்பட்ட ) மாலையையை (அணிந்த)

சென்னி இளவளவன் = சென்னி இளவன்


மண்ணகம் = மண்ணுலகை

காவலனே = காப்பவன் 

என்பரால் = என்று கூறுவார்கள்

மண்ணகம் = உலகத்தை காக்கும்

காவலனே ஆனக்கால் = காவலனாக அவன் இருந்தால்

காவானே = (வராமல்) காக்க மாட்டானோ 

மாலைக்கண் = மாலை நேரத்தில்

கோவலர் = ஆயர்கள்

வாய் வைத்த குழல் = வாய்வழியே வரும் இந்த புல்லாங்குழல் இசையை 

1 comment:

  1. சும்மா ஓவரா இருந்தாலும், நல்லா இருக்கிறது!

    ReplyDelete