இராமாயணம் - அருளின் வாழ்வே
அருள் என்றால் மற்ற உயிர்களின் மேல் அன்பு கொள்வது, அவற்றின் துன்பத்தை துடைத்தல், அவற்றின் மேல் கருணை கொள்ளுதல். சீதை, அனுமனை அருளின் வாழ்வே என்று அழைத்தாள். அருளை வாழ்விப்பவன், அருளே அவன் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.
அவள், அனுமனை நீ என் தாய், என் தந்தை, என் தெய்வம் என்று கூப்பிடுகிறாள். சீதையால் தாய், தந்தை மற்றும் கடவுள் என்று அழைக்கப் பட்டவன் அனுமன்.
நீ செய்த உதவிக்கு நான் என்ன கை மாறு செய்ய முடியும் என்று பிராட்டி கரைகிறாள்.
பாடல்
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூது ஆய்,
செம்மையால்உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால்
எளியது உண்டே ?
அம்மை ஆய்,அப்பன் ஆய அத்தனே ! அருளின்
வாழ்வே !
இம்மையேமறுமைதானும் நல்கினை, இசையோடு’
என்றாள்.
பொருள்
மும்மை ஆம் = மூன்று
உலகம் தந்த = உலகங்களை தந்த
முதல்வற்கும் = பிரமனுக்கும்
முதல்வன் = பிரமனுக்கு முதல்வன், அதாவது திருமால்
தூது ஆய் = திருமாலான இராமனுக்கு தூதாக வந்தவனே
செம்மையால் = உன்னுடைய செம்மையான செயலால்
உயிர் தந்தாய்க்குச் = எனக்கு உயிர் தந்த உனக்கு
செயல் என்னால் எளியது உண்டே ? = என்னால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை
அம்மை ஆய் = என்னுடைய தாய் நீ
அப்பன் ஆய = என்னுடைய தந்தை நீ. தாயும் தந்தையும் நமக்கு உயிர் தந்தவர்கள். சீதை தற்கொலை செய்து கொள்ள நினைத்தாள். அதை தடுத்து, அவளுக்கு உயிர் தந்ததால், அவன் தாயும் தந்தையும் ஆவான்.
அத்தனே ! = என் தெய்வம் நீ
அருளின் வாழ்வே ! = அருளை வாழ வைப்பவனே, அருளே வாழ்வாக இருப்பவனே, அருளுக்கு வாழ்வு தருபவனே
இம்மையே = இந்த வாழ்வும்
மறுமைதானும் = மறுமை உலகையும்
நல்கினை = எனக்கு தந்தாய்
இசையோடு = புகழோடு தந்தாய்
என்றாள் = என்றாள்
உனக்கு நான் கை மாறு செய்வேன் என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு சிரஞ்சீவியாக வாழ வரம் தந்தாள்.
Superb. The emotion is felt heavily while reading itself.Thank you very much
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteBy mistake I deleted the comment. I want to click the view, and by mistake, I clicked the delete. Can u please repost the comments.
DeleteSorry.
அருளின் வாழ்வே-Incredible title(poem too).Thanks for sharing many poems from Tamil Literature with us.
ReplyDeleteஉணர்ச்சி ததும்புகிறது இந்தப் பாடலில். ஆகா.
ReplyDelete