திருக்குறள் - வெயிலும் அறமும்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
எலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ, அதுபோல் அன்பு இல்லாததை அறம் காயும். அது கோனார் தமிழ் உரை.
இதை சொல்ல வள்ளுவர் எதற்கு...பரிமேலழகர் எதற்கு.
எலும்பு இல்லாதது எது ? புழு. புழுவிற்கு எலும்பு கிடையாது. சில பூச்சிகளுக்கு எலும்பு கிடையாது.
இந்த புழுவை வெயில் எப்படி வாட்டி எடுக்கும் ? கொதிக்கும் சிமெண்டு தரையில் ஒரு மண் புழுவை போட்டுப் பாருங்கள். அது என்ன பாடு படும் என்று பாருங்கள்.
அது அந்த வெயிலை விட்டு வேகமாக விலகி போக நினைக்கும். அதால் முடியாது. அதனால் ஊர்ந்து ஊர்ந்து தான் போக முடியும். ஊரும் போது உடல் எல்லாம் வெயில் எரிக்கும். தகிக்கும். என்ன செய்யும் ? ஓட முடியுமா ? முடியாது ? சிறிது நேரத்தில் தண்ணீர் தவிக்கும். எங்கு போய் குடிப்பது ? கடைசியில் அது வெயிலில் சுருண்டு இறந்து போகும்
இரண்டாவது, நாம தூக்கி வெயிலில் போட வேண்டும் என்று இல்லை. வெயில் குறைவாக இருக்கும் போது , அந்த புழுவே வெளியே வந்து உலாத்தும்...கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏறும்போது , அது சூட்டில் வாடும். அது போல அன்பு இல்லாதவன் தானே வந்து தவறு செய்வான். இராவணை கொல்லவா இராமன் கானகம் போனான். அன்பில்லாத அந்த அரக்கன், தானே வலிய வந்து தவறிழைத்து அழிவை தேடிக்கொண்டான்.
மூன்றாவது, வெயில் வருவது புழுவைக் கொல்ல அல்ல. அது பாட்டுக்கு வருது. ஆனால், இந்த புழு அந்த வெயிலின் கொண்டுமை தாங்காமல் வாடுகிறது. அது போல் அறம் பொதுவாய் இருந்தாலும், அன்பில்லாதவர்களை அறம் சுடும்.
Fantastic.Unnoda blog moolama neraiya puthu poems padika,therinjuka mudiyarthu.You are Doing a great job.Many many thanks.
ReplyDelete