Pages

Sunday, April 28, 2013

முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம்


முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம் 


அவனைப் பார்த்தது என் கண்கள்.

அவனோடு கலந்தது என் நெஞ்சம்.

தவறு செய்தது எல்லாம் இந்த கண்ணும் தோளும்...ஆனால் தண்டனை பெறுவது என்னவோ மெலியும் என் தோள்கள்.அது என்ன பாவம் செய்தது ?

தவறு செய்தவர்களை விட்டு விட்டு தவறு செய்யாதவர்களை தண்டிப்பது இந்த உறையூர் வளவனுக்கு முறை போலும்

பாடல்

கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு.


பொருள்






கண்டன உண்கண் = அவனை கண்டது என் கண்கள்

கலந்தன நல்நெஞ்சம் = அவனோடு கலந்தது என் மனம்

தண்டப் படுவ தடமென்தோள் = தண்டப் + படுவது + தட + மென் + தோள்  = தண்டனை அனுபவிப்பது என்னுடைய மென்மையான தோள்கள்

கண்டாய் = கண்டாய்

உலாஅ மறுகில் = உலாவரும்

 உறையூர் வளவற் = உறையூர் வள்ளல்

கெலாஅ முறைகிடந்த வாறு = முறை தவறி நடந்தது இவ்வாறு
.


1 comment:

  1. அருமை. அருமை.

    ஒரே ஒரு தட்டச்சுப் பிழை: "தவறு செய்தது எல்லாம் இந்த கண்ணும் நெஞ்சும்" என்றிருக்க் வேண்டும்.

    ReplyDelete