Pages

Saturday, April 27, 2013

திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல்


திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல் 



உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

சரக்கு அடிச்சாதான் கிக்கு வரும். காதல் பார்த்தாலே கிக்குதான்.

அதுதான் மேலோட்டமான அர்த்தம்.

வள்ளுவராவது ஏழு வார்த்தைகள் உபயோகப் படுத்தி இத்தனை கொஞ்சம் அர்த்தம் தருவதாவது.


கொஞ்சம் உள்ள போய்  பாப்போம்.


உண்டார் கண் அல்லது அடு நறா காமம் போல் 
கண்டார் மகிழ் செய்தல் இன்று 

நறா என்றால் - பழங்கள், இனிப்புகள், கொஞ்சம் மருந்துப் பொருள்கள் எல்லாம் சேர்த்து காய்ச்சி வடிக்கும் ஒரு பானம். உடலுக்கு நல்லது. நாவுக்கு இனிமை தருவது. கொஞ்சம் மயக்கமும் தருவது. நல்ல மணம் இருக்கும். மூக்குக்கும் இனிமை.

அந்த நறா உண்டால் தான் சுகம் தரும். இந்த லவ்சு இருக்கே, அனுபவிக்கனுனு இல்ல, பார்த்தாலே சுகம் தரும்.

அது ஒரு அர்த்தம்.

ஒரு ஆணும் பெண்ணும் முதல் முதலில் பார்க்கிறார்கள். மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு. அது காதால் தானா என்று கூட அவர்களுக்குத் தெரியாது.

கண்ணால் கண்டார்கள். அவ்வளவு தான். அதுவே அவ்வளவு சுகம்.

அவள் தானா....நான் தேடிய செவந்திப் பூ இவள்தானா என்று முதல் பார்வையே மனதை  கொள்ளை கொண்டு சென்று விடும்.

தொட வேண்டும் என்றல்ல....பட வேண்டும் என்றல்ல...தூரத்தில் அவள் நடந்து வருவதைப் பார்த்தால் கூட போதும்...  அவன் மனதில் நந்தவனம் பூ பூப்பூக்கும்...சில பல மேகங்கள் சாரல் தூவி விட்டு செல்லும் ..தென்றல் கவரி வீசும்....தெருவோரப் புற்களும் பாதம் வருடும்....


காதல் அப்புறம் வரும்....அதற்க்கு முன்பே என்ப வெள்ளம் அள்ளிக் கொண்டு போகும்  ....

கண்டார் மகிழ் செய்யும் காதல்....

இதை படிக்கும்போது, உதட்டோரம் புன்னகை கசிந்தால், நீங்கள் காதல் தேவதையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்....



1 comment:

  1. "அவன் மனதில் நந்தவனம் பூ பூப்பூக்கும்...சில பல மேகங்கள் சாரல் தூவி விட்டு செல்லும் ..தென்றல் கவரி வீசும்....தெருவோரப் புற்களும் பாதம் வருடும்...."

    வைரமுத்து உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும்!

    ReplyDelete